Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அதிர்ஷ்டமே இல்லாதவர் ரோஹித் சர்மா.. வெற்றிக்கு பின் ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் ஓபன் டாக்

அகமதாபாத் : இந்திய அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் ஆட்டநாயகன் ட்ராவிஸ் ஹெட், இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா குறித்து அதிரடியாக ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்.

2023 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் அபார ஆட்டம் ஆடி 120 பந்துகளில் 137 ரன்கள் குவித்து தன் அணியை வெற்றி பெறச் செய்தார். ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலகக்கோப்பை வென்றது.

INDIA vs AUSTRALIA FINAL 2023 : Travis Head says Rohit Sharma is unluckiest person in the world

இந்தப் போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக ஆடிய ட்ராவிஸ் ஹெட், இந்தியா பேட்டிங் செய்த போது அசாதாராண கேட்ச் ஒன்றை பிடித்து இருந்தார். ரோஹித் சர்மா 47 ரன்கள் எடுத்த நிலையில், பவுண்டரி அடிக்க முயற்சி செய்து, பந்தை நேராக தூக்கி அடித்தார்,

அப்போது ட்ராவிஸ் ஹெட் அசுர வேகத்தில் ஓடிச் சென்று கடினமான அந்த கேட்சை பிடித்தார். ரோஹித் சர்மா அந்த சிறப்பான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அது போட்டியில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. அது குறித்தும், தன் சதம் குறித்தும் போட்டி முடிந்த பின் ஆட்டநாயகன் விருதை வாங்கும் போது பேசினார் ட்ராவிஸ் ஹெட். அப்போது தான் ரோஹித் சர்மாவை இந்த உலகிலேயே அதிர்ஷ்டம் இல்லாத நபர் என குறிப்பிட்டு பேசினார்.

ட்ராவிஸ் ஹெட் பேசுகையில், "இதை (உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்ததை) நான் எதிர்பார்க்கவே இல்லை. பத்து லட்சம் ஆண்டுகளில் இதை நான் யோசித்து கூட இருக்க மாட்டேன். சிறப்பான நாள் இது. முதல் 20 பந்துகள் நான் ஆடியது எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. அதனால், தொடர்ந்து ஆடினேன். டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது பெரிய அளவில் உதவி செய்தது." என்றார்.

மேலும் அந்த கேட்ச் குறித்து கேட்ட போது, "இந்த உலகிலேயே அதிர்ஷ்டம் இல்லாத நபர் ரோஹித் சர்மாவாகத்தான் இருக்க முடியும். பீல்டிங்கில் நான் கடும் முயற்சி செய்து அந்த கேட்ச்சை பிடித்தேன். சதம் அடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. அதே போல, அந்த கேட்ச்சை பிடிப்பேன் எனவும் நான் நினைக்கவில்லை." என்றார் ட்ராவிஸ் ஹெட்.

Story first published: Monday, November 20, 2023, 6:57 [IST]
Other articles published on Nov 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+