Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS : பழசெல்லாம் மறந்து போச்சா லாபுஷேன்.. சுயரூபத்தை காட்டிய கோலி.. கப்சிப் ஆன ஆஸ்திரேலிய வீரர்

அகமதாபாத் : ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுஷேன் நீண்ட நேரம் களத்தில் நின்று ஆடிய நிலையில், விராட் கோலி தன் சுயரூபத்தை அவரிடம் காட்டினார்.

அதை சற்றும் எதிர்பார்க்காத மார்னஸ் லாபுஷேன் கப்சிப் ஆகி அவரை பார்க்காமல் தவிர்த்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோஹித் சர்மா 47, விராட் கோலி 54, கே எல் ராகுல் 66 ரன்கள் எடுத்தனர். எனினும், இந்திய அணி நிதான ஆட்டம் ஆடி ரன் எடுக்காமல் கோட்டை விட்டது.

INDIA vs AUSTRALIA FINAL 2023 : Virat Kohli tries sledging Marnus Labushagne

அதுஇது அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆட வந்த போது இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தியது. ஆனாலும், அதன் பின் மார்னஸ் லாபுஷேன் - ட்ராவிஸ் ஹெட் ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஆடியது.

அதிலும் மார்னஸ் லாபுஷேன் மொத்தமாக டெஸ்ட் போட்டி போல ஆடினார். அதனாலேயே விக்கெட் எடுக்க முடியாமல் இந்தியா திணறியது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விராட் கோலி தனது பழைய சுயரூபத்தை வெளியில் கொண்டு வந்தார்.

கேப்டனாக இருந்த காலத்தில் விராட் கோலி எதிரணி வீரர்களை கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்வார். அவர்களை சீண்டி விட்டு விக்கெட் வீழ்த்த முயல்வவார். அதிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடும் போது அவரது கோபம் மற்றும் சீண்டல்கள் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில், மார்னஸ் லாபுஷேனை கோபப்படுத்த முயன்ற விராட் கோலி அவர் அருகே சென்று சில வார்த்தைகளை பேசினார். கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது "கேப்டன் விராட் கோலி"யை மீண்டும் கண் முன் கொண்டு வந்த கோலி, மார்னஸ் லாபுஷேனை கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்தார்.

அதன்பின் லாபுஷேன் அவருக்கு பதில் அளிக்காமல் கப்சிப் என ஆனார். ஆனால், அதே சமயம் தன் ஆட்டத்தில் கண்ணும் கருத்துமாக இருந்த லாபுஷேன் ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவருடன் கூட்டணி அமைத்து ஆடிய ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்தார்.

Story first published: Sunday, November 19, 2023, 21:13 [IST]
Other articles published on Nov 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+