Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆடுகளம் மீது கோலி கடும் கோபம்.. முக்கியமான கட்டத்தில் முதுகில் குத்திய பிசிசிஐ..நம்பி ஏமாந்த இந்தியா

அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு ஆடுகளம் மிகவும் முக்கியமானதொரு காரணமாக மாறி இருக்கிறது.

பேட்டிங், பந்துவீச்சு என அனைத்துமே பலத்துடன் இருந்த இந்திய அணி நேற்று நடைபெற்ற அகமதாபாத் மைதானத்தில் எதிர்பார்த்தபடி விளையாட முடியவில்லை. இதற்கு காரணம் ஆடுகளம் மோசமான வகையில் அமைக்கப்பட்டது என்று தெரிகிறது.

India vs australia final - Virat kohli shows his anger on the ahmedabad pitch

இந்த தொடர் முழுவதும் இந்தியா விளையாடிய ஆட்டத்தில் டாஸ் பெரிய தாக்கத்தை முடிவுகளில் ஏற்படுத்தவில்லை. அதற்கு காரணம் ஆடுகளம் தோய்வாக இல்லாமல் பேட்டிங்கிற்கு சாதகமாக 100 ஓவரும் இருந்ததுதான். ஆனால் இந்தியா இறுதிப்போட்டியில் விளையாடிய ஆடுகளம் மதிய நேரத்தில் தொய்வாகவும் இரவு நேரத்தில் பனிப்பொழிவு ஏற்பட பேட்டிங்கிற்கு சாதகமாகவும் மாறியது.

இப்படிப்பட்ட ஆடுகளத்தில் விளையாடும் போது டாஸ் மிகவும் முக்கியமாகும். இந்த நிலையில் இறுதிப்போட்டியில் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் தான் இருக்கும் என நினைத்து இந்திய வீரர்கள் களத்திற்கு வந்தனர். ஏனென்றால் அஹமதாபாத் ஆடுகளம் ஐபிஎல் போட்டியின் போது 190 ரன்கள் சராசரியாக அடிக்கப்பட்டது. இதனால் 350 முதல் 400 ரன்கள் அடிக்கும் நோக்கில் தான் இந்திய அணி வீரர்கள் களத்திற்கு வந்தார்கள்.

ஆனால் ஆடுகளம் தோய்வாக மாறுவதை உணர்ந்த இந்திய வீரர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் இரண்டு முறை ஆடுகளத்தை பார்த்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். மேலும் ஆட்டம் இழந்தவுடன் ஆடுகளத்தில் பந்து வேகமாக பேட்டிற்கு வராததை நினைத்து பிச்சையை பார்த்து ஐந்து வினாடிகள் தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

இறுதிப் போட்டியில் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய அணி நிர்வாகம் தங்களுக்கு கருப்பு மண் கலந்த ஆடுகளம் தான் வேண்டும் என்றும் மேலும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தை இறுதிப் போட்டியில் நடத்துங்கள் என்று கூறி இருப்பதும் தற்போது பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கோலி,ரோகித் உள்ளிட்ட இந்திய வீரர்கள் ஏமாற்றத்துடன் இருந்தனர்.

Story first published: Monday, November 20, 2023, 12:14 [IST]
Other articles published on Nov 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+