Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கை விட்ட தவான், கோலி.. தனியாக போராடிய ரோஹித்.. முதல் போட்டியில் இந்தியா தோல்வி

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 288 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய இந்தியா 254 ரன்கள் மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஜடேஜா உள்ளே

ஜடேஜா உள்ளே

பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பண்டியா - ராகுல் இருவரும் விசாரணை முடியும் வரை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் பண்டியா இடம் பெறுவதாக இருந்த நிலையில் அவருக்கு பதில் ஜடேஜாவை களமிறக்கினார் கோலி.

ஆஸி. அணியின் நிலை

ஆஸி. அணியின் நிலை

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை உலகக்கோப்பைக்கு முன் அந்த அணி தங்களால் வெற்றி பெற முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதற்கேற்ப திட்டம் வகுத்து இந்த போட்டியில் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - தவான், ரோஹித் சர்மா, கோலி, அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், தோனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அஹ்மது.

ஆஸி. அணி விவரம்

ஆஸி. அணி விவரம்

ஆஸி அணி - கேரி, ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், நாதன் லியோன், பீட்டர் சிடில், பெஹ்ரேன்டாஃப்

ஆஸி பேட்டிங் விவரம்

ஆஸி பேட்டிங் விவரம்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. பின்ச் 6 ரன்களில் புவனேஸ்வர் பந்தில் போல்டாகி அதிர்ச்சி அளித்தார். கேரி 24 ரன்களில் குல்தீப் சுழலில் வீழ்ந்தார். உஸ்மான் கவாஜா, மார்ஷ், ஹேண்ட்ஸ்கோம்ப் அரைசதம் அடித்து அணியை மீட்டனர். ஸ்டாய்னிஸ் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. அணி 50 ஓவர்கள் முடிவில் 288 ரன்கள் எடுத்து 5 விக்கெட்கள் இழந்து இருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சு விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறியது ஏமாற்றமாக இருந்தது.

இந்திய அணி பேட்டிங்

இந்திய அணி பேட்டிங்

அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியில் தவான் 0, கோலி 3, ராயுடு 0 என 4 ரன்களுக்குள் மூன்று முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். பின்னர் ரோஹித், தோனி இணைந்து மிகப் பொறுமையாக ஆடினர். தோனி 96 பந்துகளில் 51 ரன்கள் அடித்து வெளியேறினார். ரோஹித் தனி ஆளாக நின்று சதம் அடித்து போராடினார். எனினும், அவர் 133 ரன்களில் வெளியேறிய போது இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இந்தியா 50 ஓவர்களில் 254 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்கள் இழந்து இருந்தது. ஆஸி. அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்கள் வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

Story first published: Saturday, January 12, 2019, 16:36 [IST]
Other articles published on Jan 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+