For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus : அனில் கும்ப்ளேவுக்கு அப்புறம் கோலி தான்! ஆசிய வரலாற்றை மாற்றிய இந்தியா!!

அடிலெய்டு : அடிலெய்டில் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.

ஐந்தாம் நாள் வரை நீடித்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.

இதன் மூலம் இந்திய அணி சுமார் பத்து வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் கோலி இதன் மூலம் ஆசிய அளவில் புதிய சாதனை செய்துள்ளார்.

கடைசியாக அனில் கும்ப்ளே

கடைசியாக அனில் கும்ப்ளே

இந்திய அணி கடைசியாக 2008இல் அனில் கும்ப்ளே தலைமையில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பின் தோனி தலைமையில் இரண்டு முறை ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா பங்கேற்றது. அந்த இரண்டு முறையும் இந்தியா படு தோல்வி அடைந்தது.

கோலி தலைமையில் வெற்றி

கோலி தலைமையில் வெற்றி

இந்த நிலையில் கோலி தலைமையில் ஆஸ்திரேலியா வந்த இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பத்து ஆண்டுகள் போராட்டத்தை முடித்து வைத்து ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

தொடரின் முதல் போட்டி வெற்றி

தொடரின் முதல் போட்டி வெற்றி

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இது வரை இந்திய அணி வெற்றி பெற்றதில்லை. அது போல, ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் இதுவரை 1-0 என முன்னிலை வகித்ததும் இல்லை. அந்த சாதனைகளை இந்த முறை தனதாக்கிக் கொண்டுள்ளது இந்தியா.

ஆசிய சாதனை என்ன?

ஆசிய சாதனை என்ன?

ஆசிய அளவில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுக் கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி.

இந்திய அணியின் சாதனை

இந்திய அணியின் சாதனை

மேலும், இந்திய அணி ஒரே ஆண்டில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிய அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

சாதனைகளுக்கு பின்னே!

சாதனைகளுக்கு பின்னே!

ஆஸ்திரேலிய அணி தற்போது பலவீனமாக இருப்பதே இந்தியா வரிசையாக சாதனை செய்ததற்கு காரணம், ஸ்மித், வார்னர் இருந்து இருந்தால், இந்த வெற்றி கடினம் என்ற பேச்சுக்களையும் கேட்க முடிகிறது.

Story first published: Monday, December 10, 2018, 13:44 [IST]
Other articles published on Dec 10, 2018
English summary
India vs Australia first test : Captain Kohli sets Asian record after winning in Adelaide test against Australia.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+