For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றிக்கு காரணம் இவர் தான்!! ஆலன் பார்டரிடம் பாராட்டு வாங்கிய இந்திய வீரர்

அடிலெய்டு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு யார் காரணம் என்பது பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆலன் பார்டர் பேசினார்.

அடிலெய்டு நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியில் இந்தியா பல சாதனைகள் செய்துள்ள நிலையில், வெற்றிக்கான காரணம் குறித்து பேசினார் ஆலன் பார்டர்.

புஜாரா தான் வித்தியாசம்

புஜாரா தான் வித்தியாசம்

"இந்திய அணியில் புஜாரா மிக அற்புதமாக ஆடினார். அவரது இரண்டு இன்னிங்க்ஸ் பேட்டிங் தான் இரண்டு அணிகளுக்கு இடையே இருந்த வித்தியாசம்" என்றார் ஆலன் பார்டர். புஜாரா முதல் இன்னிங்க்ஸில் சதமும், இரண்டாம் இன்னிங்க்ஸில் அரைசதமும் அடித்து இருந்தார்.

ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனம்

ஆஸ்திரேலிய பேட்டிங் பலவீனம்

மேலும், ஆலன் பார்டர் ஆஸ்திரேலிய வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பியதையும் குறிப்பிட்டார். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசியும், பேட்டிங் மிகவும் பலவீனமாக இருந்தது எனக் கூறினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 250 மற்றும் இரண்டாம் இன்னிங்க்ஸில் 307 ரன்களே மட்டுமே எடுத்து இருந்தது.

மோசமான ஷாட் ஆடினர்

மோசமான ஷாட் ஆடினர்

இரண்டாம் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலிய வீரர்கள் மோசமான ஷாட் ஆடி ஆட்டமிழந்தனர். இதையா நாம் ஆஸ்திரேலிய வீரர்களிடம் எதிர்பார்த்தோம் என்பது போல இருந்தது அந்த வீரர்கள் ஆட்டமிழந்தது என குறிப்பிட்டார்.

இந்தியாவும் அப்படி தான் ஆடியது

இந்தியாவும் அப்படி தான் ஆடியது

ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமல்ல. இந்திய வீரர்களும் அப்படித் தான் ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்க்ஸில் புஜாரா தவிர அனைத்து வீரர்களும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். இரண்டாம் இன்னிங்க்ஸில் புஜாராவோடு, ரஹானேவும் கை கொடுத்தார். மற்ற வீரர்கள் மீண்டும் ஒருமுறை சொதப்பினர்.

Story first published: Monday, December 10, 2018, 15:22 [IST]
Other articles published on Dec 10, 2018
English summary
India vs Australia first test : Allan Border says Cheteshwar Pujara is the difference between India and Australia, after India beat Australia by 31 runs.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X