Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind Vs Aus First Test : பொறுப்பாக ஆடிய புஜாரா.. சதம் அடித்தார்.. கைவிட்ட கோலி, ரோஹித்

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் துவங்கியது.

இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியை ஆஸ்திரேலியா சமாளிக்குமா என்ற பலத்த சந்தேகம் இந்த போட்டி துவங்கும் முன் வரை இருந்தது.

ஆனால், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க இந்தியா திணறியது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போலவே இந்திய பேட்டிங் மீண்டும் ஒரு முறை சரிந்தது.

இந்திய அணியில் ரோஹித்

இந்திய அணியில் ரோஹித்

முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த ப்ரித்வி ஷா இல்லாத நிலையில், முரளி விஜய் - ராகுல் துவக்கம் அளித்தனர். ஹனுமா விஹாரி அல்லது ரோஹித் சர்மா இருவரில் ஒருவர் அணியில் இடம் பெறுவார் என கூறப்பட்ட நிலையில், ரோஹித் அணியில் இடம் பெற்றார்.

இந்திய வீரர்கள் விவரம்

இந்திய வீரர்கள் விவரம்

முதல் டெஸ்டில் ஆடும் இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ரஹானே (துணை கேப்டன்), ராகுல், முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், அஸ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா.

துவக்க வீரர்கள் மோசம்

துவக்க வீரர்கள் மோசம்

இந்திய அணிக்கு இங்கிலாந்தை போன்றே ஆஸ்திரேலியாவிலும் மிக மோசமான துவக்கம் அளித்து அதிர்ச்சி அளித்தது ராகுல் - முரளி விஜய் கூட்டணி. ராகுல் 2 ரன்களுக்கும், முரளி விஜய் 11 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

கோலியும் கைவிட்டார்

கோலியும் கைவிட்டார்

அடுத்து புஜாரா - கோலி இணைந்து அணியை மீட்பார்கள் என நினைத்த போது கோலி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெரும் அதிர்ச்சி அளித்தார். அடுத்து துணை-கேப்டன் ரஹானே 13 ரன்களுக்கு வெளியேறி வெறுப்பேற்றினார். இந்தியா 41 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

இந்தியா மோசமான பேட்டிங்

இந்தியா மோசமான பேட்டிங்

அடுத்து ரோஹித் சர்மா - புஜாரா ஓரளவு கூட்டணி அமைத்து நிலையாக ஆடினர். அப்போது ரோஹித் சிக்ஸ் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து பொறுப்பில்லாமல் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பண்ட் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இப்படி விக்கெட்கள் விழுந்து கொண்டு இருந்த போது, புஜாரா ரன்னே எடுக்காமல் கட்டை போட்டு ஆஸ்திரேலிய வீரர்களை காயவிட்டார்.

புஜாரா 16வது சதம்

புஜாரா 16வது சதம்

தொடர்ந்து சிறப்பாக ஆடிய புஜாரா ரன் அஸ்வின், இஷாந்த் சர்மா ஆட்டமிழந்த உடன் தன் குவிக்கும் வேகத்தை அதிகரித்தார். தன் 16வது டெஸ்ட் சதத்தை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். புஜாரா 123 ரன்கள் அடித்து இருந்த போது கம்மின்ஸ்-ன் அருமையான பீல்டிங்கால் ரன் அவுட் ஆனார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 87.5 ஓவர்களில் 250 ரன்கள் எடுத்து 9 விக்கெட்கள் இழந்துள்ளது. அடுத்து ஷமி, பும்ரா மட்டுமே களத்தில் இருப்பதால், இரண்டாம் நாள் விரைவில் இந்தியா தன் முதல் இன்னிங்க்ஸ்-ஐ முடித்து விடும். இந்தியா 200 ரன்களை தாண்டினால் கூட பெரிய விஷயம் என இருந்த நிலையில் புஜாரா இந்திய அணியை மீட்டுள்ளார்.

Story first published: Thursday, December 6, 2018, 13:33 [IST]
Other articles published on Dec 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+