Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus First Test : பௌலிங்ல ஓபனிங் நல்லாத்தான் இருக்கு.. ஆனா ஃபினிஷிங் சரி இல்லையேப்பா!!

Recommended Video

அஸ்திவாரத்தை ஆட்டிய அஸ்வின், ஆஸி. தடுமாற்றம்- வீடியோ

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது.

எனினும், ஆஸ்திரேலியா சமாளித்து ரன் குவித்து வருகிறது. குறைந்த இடைவெளியில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது இந்தியா.

இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. புஜாரா சதம் அடித்தார். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடர்ந்து வருகிறது.

இந்தியா 250 ரன்கள்

இந்தியா 250 ரன்கள்

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்கள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்து இருந்தது. ஷமி மற்றும் பும்ரா களத்தில் நின்றனர். இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷமி வெளியேறினார். இதையடுத்து இந்தியா 250 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது.

இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

முதல் இன்னிங்க்ஸில் புஜாரா 123 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். ரோஹித் 37, அஸ்வின் 25, பண்ட் 25 அடித்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே அடித்தனர்.

ஆஸ்திரேலியா தடுமாற்றம்

ஆஸ்திரேலியா தடுமாற்றம்

ஆஸ்திரேலியா தன் பேட்டிங்கை துவக்கியது. முதல் ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய மூன்றாவது பணத்தில் ஆரோன் பின்ச் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த மூன்று வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 87 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்தது.

ஆஸி. பேட்டிங் விவரம்

ஆஸி. பேட்டிங் விவரம்

அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் தடுப்பு ஆட்டத்தில் இறங்கினர். ட்ராவிஸ் ஹெட் மட்டும் அரைசதம் கடந்து ஆடி வருகிறார். ஆஸ்திரேலியா இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 191 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்துள்ளது. 87க்கு 4 விக்கெட்கள் என்ற நிலையில் இருந்து ஓரளவு மீண்டுள்ளது ஆஸ்திரேலியா. இந்தியா பந்துவீச்சின் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்தி விட்டு பின்னர் தடுமாறி வருகிறது.

அஸ்வின் 3 விக்கெட்கள்

அஸ்வின் 3 விக்கெட்கள்

மூன்று டாப் ஆர்டர் வீரர்களை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். குல்தீப், ஜடேஜாவை விடுத்து அஸ்வினை அணியில் எடுத்ததை சிலர் விமர்சனம் செய்த நிலையில், அஸ்வின் அதிரடியாக முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இஷாந்த், பும்ரா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.

Story first published: Friday, December 7, 2018, 14:54 [IST]
Other articles published on Dec 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+