Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus First Test : இந்தியா சாதனை வெற்றி.. ஆஸ்திரேலியாவின் போராட்டம் வீண்

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா. ஆஸ்திரேலிய அணி போராடினாலும் இறுதியில் தோல்வி அடைந்தது.

இந்திய அணியில் புஜாரா இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

முதல் இன்னிங்க்ஸ் விவரம்

முதல் இன்னிங்க்ஸ் விவரம்

முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் புஜாரா சதம் அடிக்க இந்தியா 250 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ட்ராவிஸ் ஹெட் 72 ரன்கள் அடிக்க அந்த அணி 235 ரன்களை எட்டியது.

இந்தியா 2வது இன்னிங்க்ஸ்

இந்தியா 2வது இன்னிங்க்ஸ்

15 ரன்கள் முன்னிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ துவக்கிய இந்திய அணிக்கு புஜாரா 71 மீண்டும் கை கொடுத்தார். ரஹானே 70, ராகுல் 44 ரன்கள் அடிக்க இந்திய அணி 307 ரன்கள் எடுத்தது.

தடுமாறும் ஆஸி. அணி

தடுமாறும் ஆஸி. அணி

ஆஸ்திரேலிய அணிக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் பாதியில் வெற்றி இலக்கை நோக்கி கடைசி இன்னிங்க்ஸ்-ஐ துவக்கியது ஆஸ்திரேலியா. அந்த அணி தொடர்ந்த இடைவெளியில் விக்கெட்களை இழக்கத் துவங்கியது. ஷான் மார்ஷ் 60 ரன்கள் அடித்தார். கேப்டன் டிம் பெய்ன் 41 ரன்கள் எடுத்தார். எனினும், அனைத்து முன் வரிசை மற்றும் நடு வரிசை பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்த நிலையில், பின் வரிசை வீரர்கள் தோல்வியை தவிர்க்க போராடினர். எனினும், அந்த அணி 291 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

பந்துவீச்சில் இந்தியா ஆதிக்கம்

பந்துவீச்சில் இந்தியா ஆதிக்கம்

இந்த போட்டியில் இந்தியா பந்துவீச்சில் கலக்கியது. முதல் இன்னிங்க்ஸில் துவக்கத்தில் அதிரடியாக விக்கெட்களை அள்ளிய இந்திய அணி, இரண்டாம் இன்னிங்க்ஸில் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தியது. இரண்டாம் இன்னிங்க்ஸில் இஷாந்த் 1, பும்ரா, அஸ்வின், ஷமி தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் புஜாரா

ஆட்ட நாயகன் புஜாரா

மற்ற இந்திய வீரர்கள் பலரும் சரியாக ரன் குவிக்காத நிலையில், புஜாரா நிலைத்து நின்று முதல் இன்னிங்க்ஸில் 123 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 71 ரன்களும் அடித்து வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இந்த போட்டியின் சிறந்த வீரர் விருதையும் வென்றார்.

Story first published: Monday, December 10, 2018, 11:26 [IST]
Other articles published on Dec 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+