Ind vs Aus First Test : இஷாந்த் பந்துவீச்சில் பிய்த்துக் கொண்டு பறந்த ஸ்டம்ப்கள்
Recommended Video

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியா பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியா முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கில் திண்டாடிய நிலையில், ஆஸ்திரேலிய அணியும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விரைவில் இழந்தது.
இஷாந்த் சர்மா வீசிய முதல் ஓவரில் விக்கெட் கிடைத்தது. ஆரோன் பின்ச் மூன்றாவது பந்திலேயே பௌல்ட் அவுட் ஆனார்.

இரண்டாம் நாள் துவக்கம்
இந்தியா முதல் நாள் இறுதியில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்து இருந்தது. இரண்டாம் நாளின் முதல் பந்தில் ஷமி ஆட்டமிழக்க இந்தியா 250 ரன்களுக்கு தன் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது. அடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை துவக்கியது.

இஷாந்த் பந்துவீச்சில் விக்கெட்
இஷாந்த் சர்மா முதல் ஓவரை வீசினார். மூன்றாவது பந்தை இஷாந்த் வீசிய போது ஆரோன் பின்ச் கீழே இறங்கி வந்து பந்தை அடிக்க முற்பட்டார். ஆனால், பந்து லேசாக ஸ்விங் அகவே இன்சைட் எட்ஜ் ஆகி ஸ்டம்ப்களை பதம் பார்த்தது. அப்போது ஒரு ஸ்டம்ப் தவிர, மீதி இரண்டு ஸ்டம்ப்கள் பறந்து போய் கீழே விழுந்தன. ஸ்டம்ப்கள் பறந்தது, இந்திய ரசிகர்களுக்கு காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஆரோன் பின்ச் பரிதாபம்
ஆஸ்திரேலிய இன்னிங்க்ஸ் துவக்கத்திலேயே விக்கெட் விழுந்ததால் அந்த அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. ஆரோன் பின்ச் அதிரடி வீரர் ஆவார். ஆனால், டெஸ்ட் போட்டிகளிலும் அதே போல இறங்கி அடிக்க முற்பட்டு விக்கெட்டை இழந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் பின்ச் சரியாக ஆடுவதில்லை என்பதால் நெருக்கடியில் இருக்கிறார் அவர்.

கலக்கல் அஸ்வின்
இஷாந்த் முதல் விக்கெட்டை வீழ்த்திய நிலையில், அஸ்வின் அடுத்த 3 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை 87 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலைக்கு தள்ளினார்.


Click it and Unblock the Notifications