For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus First Test : வாவ்!! ஆஸி. எதிராக அரைசதம் அடித்த இஷாந்த் சர்மா

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இஷாந்த் சர்மா சமீப காலத்தில் பந்துவீச்சில் நல்ல முதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் வெளிப்பாடாக வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மூன்றாவது பந்திலேயே விக்கெட்

மூன்றாவது பந்திலேயே விக்கெட்

இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 250 ரன்கள் எடுக்க, அடுத்து ஆட வந்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் முதல் விக்கெட்டாக ஆரோன் பின்சை மூன்றாவது பந்திலேயே அனுப்பி வைத்தார் இஷாந்த் சர்மா.

ஆஸி.வுக்கு எதிராக 50 விக்கெட்கள்

ஆஸி.வுக்கு எதிராக 50 விக்கெட்கள்

அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன்-ஐ வீழ்த்திய போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்கள் எடுத்து புதிய மைல்கல்லை எட்டினார். பேட்டிங்கில் அரைசதம் அடிக்காவிட்டாலும், விக்கெட்கள் எடுப்பதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அரைசதம் அடித்துள்ளார் இஷாந்த் சர்மா.

எத்தனை போட்டிகள்?

எத்தனை போட்டிகள்?

இந்த 50 விக்கெட்களை எடுக்க 23 டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொண்டுள்ளார் இஷாந்த் சர்மா. இது கொஞ்சம் அதிகம் தான். என்றாலும், முன்பு இருந்ததை விட இஷாந்த் தற்போது மெருகேறி உள்ளார். ஆஸ்திரேலியா தவிர்த்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 56 விக்கெட்கள் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3வது வேகப்பந்துவீச்சாளர்

3வது வேகப்பந்துவீச்சாளர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வேகப் பந்துவீச்சாளர்களில் இஷாந்த்துக்கு முன் கபில் தேவ் (79 விக்கெட்கள்) மற்றும் ஜாகிர் கான் (61 விக்கெட்கள்) உள்ளனர்.

Story first published: Saturday, December 8, 2018, 11:42 [IST]
Other articles published on Dec 8, 2018
English summary
India vs Australia first test : Ishant sharma took 50 wickets against Australia
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X