Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus : ராகுல் பிடிச்ச கடைசி கேட்ச் தரையில் பட்டுருச்சே.. “அழுகுணி” ஆட்டம் ஆடும் ஆஸி. டிவி

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை நிகழ்த்தியது.

இந்த போட்டியில் ராகுல் பிடித்த கடைசி கேட்ச், இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.

ஆனால், இதே கேட்ச் சர்ச்சையையும் உண்டாக்கி உள்ளது. சிலர் இந்த கேட்ச் தரையில் பட்டு பிடிக்கப்பட்டது என கூறி வருகின்றனர்.

அந்த கடைசி கேட்ச்

அந்த கடைசி கேட்ச்

ஆஸ்திரேலியா 291 ரன்கள் எடுத்து இருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக ஹேசல்வுட், ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் ஸ்லிப்பில் நின்று இருந்தார். ஹேசல்வுட் அடித்த பந்தை ராகுல் தரைக்கு நெருக்கமாக பிடித்தார்.

பரவிய கேட்ச் வீடியோ

ஆஸ்திரேலியாவில் இந்த போட்டியை ஒளிபரப்பும் பாக்ஸ் கிரிக்கெட் தொலைக்காட்சி, இந்த கேட்ச் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து குழப்பத்தை ஆரம்பித்து வைத்தது. கடைசி கேட்ச் சரியானது தானா? என்ற கேள்வியுடன் இந்த வீடியோ பகிரப்பட்டு இருந்தது.

டீன் ஜோன்ஸ் கருத்து

இந்த கேட்ச் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் முதலில் "சந்தேகமாக உள்ளது" என கருத்து தெரிவித்தார். பின்னர், இல்லை நான் கேட்ச்சை முன் புறமாக பார்த்தேன். அது சரியான கேட்ச் தான்" என ஒப்புக் கொண்டார்.

ரிக்கி பாண்டிங் என்ன சொன்னார்?

ரிக்கி பாண்டிங் என்ன சொன்னார்?

மற்றொரு முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங், "முதலில் சந்தேகமாக இருந்தாலும், பல வகையில் பார்த்தால், அது சரியான கேட்ச் தான் என தெரிகிறது. என்ன நடந்து என்ன! இப்போது போட்டி முடிந்து நீண்ட நேரம் ஆகி விட்டது" என ஏதோ போனால் போகிறது என்பது போல பேசி இருந்தார்.

ஆஸ்திரேலிய ரசிகர்கள் மாறுபட்ட கருத்து

ஆஸ்திரேலிய ரசிகர்கள் மாறுபட்ட கருத்து

ஆஸ்திரேலிய ரசிகர்களில் சிலர் இது சரியான கேட்ச் என்றும், சிலர் இல்லை சந்தேகம் உள்ளது என்றும் பஞ்சாயத்தை கூட்டி ட்விட்டரில் சண்டை அடித்துக் கொண்டு இருந்தனர். அவர்களுக்கு இடையே இந்தியர்கள் லந்து பண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல்

இந்திய ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக இத் சரியான கேட்ச் என முடிவு செய்து விட்ட நிலையில், எல்லோரையும் வெளுத்து வாங்கினார்கள். இந்த வீடியோவை பதிவிட்ட பாக்ஸ் தொலைக்காட்சி, ஆஸ்திரேலியா முந்தைய காலங்களில் பிடித்த சந்தேகத்திற்குரிய கேட்ச்கள், பந்து சேத விவகாரம் என வரிசையாக போட்டுத் தாக்கினார்கள்.

ரிக்கி பாண்டிங் செய்தது தான்!!

"உங்க முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் என்ன பண்ணாரோ அதே தான்" எனக் குறிப்பிட்டு, பாண்டிங் ஒரு முறை இதே போன்ற ஒரு கேட்ச் பிடித்து விட்டு அவுட் தான் என அடம் பிடித்த காட்சியை பதிவிட்டு கலாய்த்தார்.

பாக். வங்கதேசம் மாதிரி ஆஸி.

இவர் ஆஸ்திரேலியா அணி, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் இந்தியாவுக்கு எதிராக தோற்ற போட்டிகளில் புகார் கூறியதை போல, இப்போது ஆஸ்திரேலியாவும் ஆரம்பித்து விட்டது எனக் கூறி இருக்கிறார்.

ரிவ்யூ இருந்துச்சே… கேட்டு இருக்கலாமே!

ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ரிவ்யூ மீதம் இருந்தது. அதை பயன்படுத்தி இருக்கலாமே எனக் கேட்டுள்ளார் இவர்.

Story first published: Tuesday, December 11, 2018, 10:32 [IST]
Other articles published on Dec 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+