Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus First Test : செம டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்து கோலியை அவுட்டாக்கிய ஆஸி. வீரர்

Recommended Video

அடிலெய்டு முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா பௌலிங் ஆதிக்கம்

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்தில் நடந்தது போல இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா மோசமாக பேட்டிங் ஆடி வருகிறது.

இந்த போட்டியில் கோலி பொறுப்பாக ஆடுவார் என நினைத்த நிலையில், உஸ்மான் கவாஜா பிடித்த அட்டகாசமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

தடுமாற்றமான துவக்கம்

தடுமாற்றமான துவக்கம்

முதல் டெஸ்டில் முரளி விஜய் - ராகுல் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். எங்களை ஏன் அணியில் எடுத்தீர்கள்? என்பது போல விஜய் 11 ரன்களுக்கும், ராகுல் 2 ரன்களுக்கும் வெளியேறினர். அடுத்து கோலி, புஜாரா அணியை கரை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

கோலி கேட்ச் கொடுத்து அவுட்

கோலி கேட்ச் கொடுத்து அவுட்

ஆனால், கோலி 3 ரன்கள் இருக்கும் போது கம்மின்ஸ் பந்தில் உஸ்மான் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கோலி ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. உண்மையில் இந்த போட்டியில் உஸ்மான் கவாஜா மிக அற்புதமாக பிடித்த கேட்ச் முக்கிய திருப்புமுனை.

உஸ்மான் கவாஜா ஒற்றை கை கேட்ச்

உஸ்மான் கவாஜா ஒற்றை கை கேட்ச்

கம்மின்ஸ் போட்ட பந்து அவுட்சைட் - ஆஃப் திசையில் ஸ்விங் ஆகி வந்தது. பந்தை டிரைவ் செய்ய முனைந்தார் கோலி. அப்போது பேட்டில் எட்ஜ் ஆன பந்து உஸ்மான் கவாஜாவுக்கு இடது புறம் சென்றது. உஸ்மான் மிக வேகமாக இடது புறம் பாய்ந்து பந்தை ஒற்றை கையில் பிடித்தார். இது போன்ற கேட்சை சிறந்த பீல்டர்கள் மட்டுமே பிடிக்க முடியும். கோலிக்கு இது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது.

உஸ்மான் கவாஜா சகோதரர் கைது

உஸ்மான் கவாஜா சகோதரர் கைது

திட்டம் போட்டு சக மாணவர் ஒருவரை தீவிரவாத வழக்கில் சிக்க வைத்த விவகாரத்தில் உஸ்மானின் சகோதரரை, ஆஸ்திரேலிய காவல்துறை நேற்று முன்தினம் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் உஸ்மான் முதல் டெஸ்டில் ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பேட்டிங் நிலை

முதல் டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் மொத்தமாக சொதப்பினர். முரளி விஜய், ராகுல், கோலி, ரஹானே அனைவரும் சொற்ப ரன்களுக்கு வெளியறினர். ரோஹித் 37, ரிஷப் 25 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். புஜாரா மட்டுமே நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் போலவே ஆஸ்திரேலிய தொடரும் கையை மீறி போய் விடுமோ என்ற கிலி ஏற்பட்டுள்ளது.

Story first published: Thursday, December 6, 2018, 11:35 [IST]
Other articles published on Dec 6, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+