Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மழை பெய்த கடுப்பில் ஆஸி. கேப்டன்.. செம ஸ்டெப் போட்டு குஜாலாக டான்ஸ் ஆடிய கோலி

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டி இடையே மழை அவ்வப்போது குறுக்கிட்டது.

இதனால், போட்டி மூன்று முறை சிறிது நேரம் தடை பட்டது. எனினும், போட்டிக்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை.

இதனிடையே, காலையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த கோலி, செம ஜாலி மூடில் டான்ஸ் ஆடிக்கொண்டே பீல்டிங் செய்தார். அந்த காட்சி பார்க்க வேடிக்கையாக இருந்தது.

அடிக்கடி எட்டிப் பார்த்த மழை

அடிக்கடி எட்டிப் பார்த்த மழை

மூன்றாம் நாள் ஆட்டத்தில், போட்டி துவங்கும் முன்னர் 45 நிமிடங்களும், ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடிய போது 55 நிமிடங்களும் மற்றும் இந்தியா தன் இன்னிங்க்ஸ்-ஐ துவங்கும் முன் அரைமணி நேரமும் மழையால் போட்டி தடை பட்டது.

எரிச்சலான ஆஸி. கேப்டன்

எரிச்சலான ஆஸி. கேப்டன்

இதனால், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அமைதி இழந்து காணப்பட்டார். அவ்வபோது அம்பயரிடம் பேசிக் கொண்டு இருந்தார். குறிப்பாக, இந்தியா பேட்டிங் துவங்கும் முன்பு லேசான தூறலுக்காக போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது, அம்பயரிடம் தீவிரமான பேச்சுவார்த்தையில் இருந்தார் பெய்ன். ஆஸ்திரேலிய கேப்டன் இப்படி அமைதி இல்லாமல் இருந்த போது, இந்திய கேப்டன் கோலி செம ஜாலி மூடில் இருந்தார்.

ஜாலியாக இருந்த கோலி

மழையால் போட்டி தடைபட்டாலும் அது பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லாத கோலி, பீல்டிங்கின் போது விசித்திரமான டான்ஸ் ஸ்டெப் போட்டுக் கொண்டு இருந்தார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது.

காரணம் என்னவா இருக்கும்?

காரணம் என்னவா இருக்கும்?

விராட் இப்படி ஜாலி மனநிலையில் இருக்கக் காரணம் இந்திய பந்துவீச்சாளர்களே!! இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுப்பாட்டம் ஆடியது. ரன் ரேட் மிக பாதாளத்தில் இருந்தது. 88 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டாம் நாள் ஆட்டத்தை முடித்துக் கொண்டது ஆஸ்திரேலியா.

மூன்றாம் நாள் ஆட்டம் எப்படி?

மூன்றாம் நாள் ஆட்டம் எப்படி?

மூன்றாம் நாளில் ஆஸ்திரேலியா 235 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி மூன்றாம் நாள் முடிவில் 151 ரன்கள் எடுத்து மூன்று விக்கெட்கள் எடுத்து நல்ல நிலையில் உள்ளது. கோலிக்கு இந்த போட்டி இப்போது வரை ஒரே ஜாலி தான். ஆஸி. அணிக்கு தான் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Saturday, December 8, 2018, 16:17 [IST]
Other articles published on Dec 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+