
ஷமி தோள்பட்டை வலி
17வது ஓவரை வீசிய ஷமி, அந்த ஓவர் முடிவில் தோள்பட்டையை சுழற்றிக் கொண்டே மைதானத்தை விட்டு வெளியேறினார். அதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெறும் 17 ஓவர்களே இந்தியா பந்து வீசியுள்ள நிலையில், ஒரு பந்துவீச்சாளர் இல்லாவிட்டால் இந்தியாவிற்கு போட்டி கடினமாகி விடும் என சிலர் கூறினர். எனினும், ஷமி 21வது ஓவரில் மீண்டும் களத்தில் ஃபீல்டிங் செய்ய வந்தார். பின்னர் 35வது ஓவரை வீசி, பெரிய காயம் எதுவும் இல்லை என்ற அளவில் நம்பிக்கை அளித்தார். எனினும், இந்த போட்டி முழுவதும் மீண்டும் வலி ஏற்படாமல் இருக்க வேண்டும்.

நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே
இந்தியா முதல் டெஸ்டிற்கு நான்கு பந்து வீச்சாளர்களை மட்டுமே கொண்டு ஆடி வருகிறது. வேகப் பந்துவீச்சில் இஷாந்த், ஷமி, பும்ராவும், சுழற் பந்து வீச அஸ்வினும் உள்ளனர். தாக்கத்தை ஏற்படுத்தும் பகுதி நேர பந்துவீச்சாளர்கள் என இந்திய அணியில் இப்போது யாரும் இல்லை. முரளி விஜய் சில ஓவர்கள் வீசினார்.

அதிக ஓவர்கள் வீசிய அஸ்வின்
இரண்டாம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் மிக அதிக ஓவர்கள் வீசினார். சுமார் 30 ஓவர்களுக்கும் மேல் அஸ்வின் பந்து வீசிய நிலையில், அதற்கு ஷமியால் பந்து வீச முடியாதது தான் காரணமா என்ற கேள்வி எழுகிறது.
|
கோலி திட்டம் சரியா?
கோலி பகுதி நேர பந்துவீச்சாளர்களை வைத்துக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஹர்திக் பண்டியா இருந்த போது கோலி நான்கு முழு நேர பந்துவீச்சாளர்களை அணியில் வைத்திருப்பார். இப்போது அவரும் இல்லாத நிலையில், இந்திய அணியில் நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர்.
|
புவனேஸ்வர் குமார் எங்கே?
ஷமிக்கு ஏற்கனவே உடற்தகுதியில் இது போல சில பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில், புவனேஸ்வர் குமாரை அணியில் எடுத்திருக்கலாமே என்ற குரல்களும் கேட்கிறது. ஆனால், புவனேஸ்வர் குமாருக்கும் கடந்த காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் இருந்தது.
|
ரஞ்சியில் ஷமி பிடிவாதம்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் துவங்கும் முன் ரஞ்சி தொடரில் ஷமி ஆடிய போது பிசிசிஐ அவரை 15 ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என கூறி இருந்தது. ஆனால், அதை மதிக்காத ஷமி அதிக ஓவர்கள் வீசினார். அது நல்ல பயிற்சி என்றும் கூறி சமாளித்தார். ஆனால், தற்போது டெஸ்ட் தொடரின் துவக்கத்திலேயே வலி ஏற்பட்டுள்ளதால் ஷமியை சில ரசிகர்கள் திட்டி வருகின்றனர். பிசிசிஐ சொல்படி கேட்டு அப்போதே வேலைப்பளு இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கலாம் என கூறி வருகிறார்கள்.