For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கஷ்டப்பட்டு கிடைச்ச வாய்ப்பு.. இப்படி வீணாப் போச்சே முரளி விஜய்!! இனிமே என்ன பண்ணப் போறீங்க?

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸிலும் முரளி விஜய் ரன் குவிக்கவில்லை.

மிகுந்த போராட்டத்துக்கு பின் முரளி விஜய் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் பிடித்தார். எனினும், தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ப்ரித்வி ஷா மீண்டும் அணியில் இணைந்தால், ராகுல், முரளி விஜய் இருவரில் ஒருவர் வழி விட வேண்டும் என்ற நிலையில், முரளி விஜய்யின் இடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு இன்னிங்க்ஸ்-ம் மோசம்

இரண்டு இன்னிங்க்ஸ்-ம் மோசம்

முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸிலும் 11, 18 ரன்களே எடுத்தார் முரளி விஜய். இரண்டு முறையும் ஸ்டார்க் பந்தில் ஆஃப்-சைட் சென்ற பந்தில் எட்ஜ் ஆகி கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார் விஜய்.

இங்கிலாந்து தொடரில் சொதப்பல்

இங்கிலாந்து தொடரில் சொதப்பல்

இங்கிலாந்து தொடரிலும் இதே போன்ற சொதப்பல் ஆட்டத்தை ஆடினார். இரண்டு போட்டிகளில் சுத்தமாக ரன் குவிக்கவில்லை. அதையடுத்து பாதி தொடரிலேயே அணியில் இருந்து நீக்கப்பட்டார் விஜய்.

அணியில் இடம் பெற போராட்டம்

அணியில் இடம் பெற போராட்டம்

அதன் பின் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில், இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் ஆடி ரன் குவித்து தன் பார்மை உலகுக்கு நிரூபித்தார். எனினும், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரை தேர்வு செய்யவில்லை தேர்வுக் குழு.

ஆஸ்திரேலியாவிலும் சந்தேகம்

ஆஸ்திரேலியாவிலும் சந்தேகம்

ஆஸ்திரேலிய தொடரிலும் இடம் பெறுவது சந்தேகம் என்ற நிலையில் மூன்றாவது துவக்க வீரர் என்ற நிலையில் அணியில் இடம் பிடித்தார். இதனால், களம் இறங்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது.

ப்ரித்வி ஷாவால் கிடைத்த வாய்ப்பு

ப்ரித்வி ஷாவால் கிடைத்த வாய்ப்பு

ப்ரித்வி ஷா பயிற்சிப் போட்டியில் காயம் அடைந்தார். அதே பயிற்சிப் போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் முரளி விஜய் சதம் அடிக்க, முதல் டெஸ்டில் துவக்க வீரர் வாய்ப்பு உறுதியானது. ப்ரித்வி ஷா காயத்தை வைத்து வாய்ப்புப் பெற்றார் முரளி விஜய்.

அடுத்த போட்டிகளில் சந்தேகம்

அடுத்த போட்டிகளில் சந்தேகம்

ப்ரித்வி ஷா காயம் குணமாகி வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அவர் தயாராகி விடுவார் என கூறப்படுகிறது. முதல் டெஸ்டில் முரளி விஜய் சொதப்பியுள்ள நிலையில், இரண்டாவது டெஸ்ட் வாய்ப்பு சற்று சந்தேகமாக உள்ளது. ரோஹித் சர்மா தவிர துவக்க வீரராக வேறு எந்த வீரரும் இல்லை. ரோஹித் மிடில் ஆர்டரில் இறங்குகிறார். இது போன்ற சூழ்நிலையால், இரண்டாம் டெஸ்டில் முரளி விஜய் வாய்ப்பு பெற குறைந்த வாய்ப்பு உள்ளது. ஆனால், மூன்றாவது போட்டியில் முரளி விஜய் ஆடுவது சந்தேகமே!

Story first published: Saturday, December 8, 2018, 18:08 [IST]
Other articles published on Dec 8, 2018
English summary
India vs Australia first test : Murali vijay wasted his chances in test matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+