
ரிஷப் பண்ட் 25 ரன்கள்
இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது ரிஷப் பண்ட் 38 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து தன் கணக்கை முடித்துக் கொண்டார். இந்த இடைவெளியில் பாட் கம்மின்ஸ் வீசிய ஒரு ஓவரில் எளிதாக ரன் எடுத்தார்.

பாட் கம்மின்ஸ் உரசல்
இதனால், கடுப்பான கம்மின்ஸ் ரிஷப் பண்ட் அருகே வந்து எரிச்சலூட்டும் வகையில் பேசினார். ஆனால், உஷாரான நம் ரிஷப் பண்ட், கம்மின்ஸ்-ஐ கண்டு கொள்ளாமல் இருந்தார். எனினும், பண்ட் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அத்தோடு இந்த விவகாரம் முற்றுப் பெற்றது.

கட்டை மன்னன் உஸ்மான் கவாஜா
அடுத்து ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது கவாஜா, புஜாரா போன்றே கட்டை போட ஆரம்பித்தார். சென்ற மாதம் ஐக்கிய அரபு நாட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இப்படி கட்டை போட்டே ஒரு டெஸ்ட் போட்டியை டிரா செய்த பெருமைக்குரியவர் கவாஜா. அதே போல, இந்திய அணிக்கு எதிராக கட்டை போட்டு அணியை மீட்க முயற்சி செய்தார். 125 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார் கவாஜா.

கவாஜாவை கிண்டல் செய்த பண்ட்
கவாஜா பேட்டிங் செய்து கொண்டு இருந்த போது ரிஷப் பண்ட் அவருக்கு பின்னே கீப்பிங் செய்து கொண்டு இருந்த போது, "எல்லோரும் புஜாரா ஆகி விட முடியாது" எனக் கூறி கிண்டல் செய்தார்.
பண்ட்டை கிண்டல் செய்த ரசிகர்கள்
ரிஷப் பண்ட் உட்பட இந்திய வீரர்கள் பேட்டிங்கில் அணிக்கு கை கொடுக்காத நிலையில், ரிஷப் பண்ட் எல்லோரும் புஜாரா ஆகி விட முடியாது எனக் கூறுவது இந்திய வீரர்களுக்கும், ரிஷப் பண்ட்டுக்குமே பொருந்தும் எனக் கூறி ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
கம்மின்ஸ் கிட்ட கம்முன்னு இருந்த மாதிரி, உஸ்மான் கிட்ட உம்முன்னு இருந்திருக்கலாமே ரிஷப் பண்ட்!!


Click it and Unblock the Notifications