Ind vs Aus First Test : முரளி விஜய் ஏமாற்றம்.. நிலைத்து ஆடும் புஜாரா.. 2வது இன்னிங்க்ஸில் இந்தியா
அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடி வருகிறது.
முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 191 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது.
மூன்றாம் நாளில் ஆஸ்திரேலியா 235 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

இந்தியா 250 ரன்கள்
இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 9 விக்கெட்கள் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்து இருந்தது. முதல் நாளில் புஜாரா சதம் அடித்தார். ஷமி மற்றும் பும்ரா களத்தில் நின்றனர். இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஷமி வெளியேறினார். இதையடுத்து இந்தியா 250 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது.

ஆஸ்திரேலியா தடுமாற்றம்
ஆஸ்திரேலியா தன் பேட்டிங்கை துவக்கியது. முதல் ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய மூன்றாவது பணத்தில் ஆரோன் பின்ச் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்த மூன்று வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா 87 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்தது. பின்னர் மொத்தமாக தற்காப்பு ஆட்டத்துக்கு சென்ற ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 191 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து இருந்தது. ட்ராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து களத்தில் ஆட்டமிழக்காமல் நின்றார்.

ஆஸி. பேட்டிங் விவரம்
மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ட்ராவிஸ் ஹெட் 72 ரன்களுக்கு வெளியேறினார். 15 ரன்கள் முன்னிலையில் இந்தியா இரண்டாம் இன்னிங்க்ஸ்-ஐ துவங்கியது.

மழை விளையாட்டு
மூன்றாம் நாள் ஆட்டத்தில் மூன்று முறை மழை குறுக்கிட்டது. போட்டி துவங்கும் முன் ஒரு முறை, ஆஸ்திரேலியா பேட்டிங் ஆடிய போது ஒரு முறை மற்றும் இந்தியா தன் இன்னிங்க்ஸ்-ஐ துவங்கும் முன் ஒரு முறை என மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. மழைக்கு ஏற்ப இரண்டு அணிகளும் தங்கள் திட்டங்களை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்தியா பேட்டிங் விவரம்
இந்திய அணியில் முதல் இன்னிங்க்ஸில் சொதப்பிய முரளி விஜய் 18 ரன்களில் வெளியேறி மீண்டும் ஒரு முறை சொதப்பினார். அடுத்து ராகுல் 44, கோலி 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். புஜாரா 40, ரஹானே 1 ரன் எடுத்து களத்தில் நிற்கின்றனர். 61 ஓவர்கள் முடிவில் இந்தியா 151 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா 166 ரன்கள் முன்னிலையில் உள்ளது. குறைந்தபட்சம் 300 ரன்களுக்கும் மேல் இந்தியா முன்னிலை பெற்றால் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications