இன்னும் முளைக்கவே இல்லை.. அதுக்குள்ள தோனி சாதனையை தொட்ட ரிஷப் பண்ட்
அடிலெய்டு : ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக தன் மூன்றாவது டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவில் ஆடி வருகிறார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கின் போது இந்தியா பந்துவீச்சில் கலக்கியது. ரிஷப் பண்ட் நன்றாகவே விக்கெட் கீப்பிங் செய்தார்.

ஒரே இன்னிங்க்ஸில் 6 கேட்ச்கள்
ரிஷப் பண்ட் முதல் இன்னிங்க்ஸில் ஆறு கேட்ச்கள் பிடித்தார். இஷாந்த், அஸ்வின் பந்துவீச்சில் தலா 1 முறையும், ஷமி, பும்ரா பந்துவீச்சில் தலா 2 முறையும் கேட்ச் பிடித்தார் பண்ட்.

தோனியின் சாதனையை தொட்டார்
இந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரே இன்னிங்க்ஸில் அதிக கேட்ச் பிடித்தவர் தோனி.அவர் ஆறு கேட்ச் பிடித்து இருந்தார். அந்த சாதனையை தொட்டுள்ளார் ரிஷப் பண்ட். அதுவும், குறுகிய காலத்திலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் பண்ட்.

அஸ்வினுக்கே அட்வைஸ் செய்த பண்ட்
இது மட்டுமில்லாமல் தற்போதுள்ள இந்திய வீரர்களில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய அனுபவ அஸ்வினுக்கு, கீப்பிங் செய்து கொண்டே யோசனை சொல்லிக் கொண்டு இருந்தார் ரிஷப். இது ஸ்டம்ப் மீது இருந்த மைக்கில் பதிவாகி ஒளிபரப்பானது.

பண்ட்டுக்கு ஓவர் கான்பிடன்ஸா??
தோனி வழக்கமாக முன்பு கேப்டன் என்ற முறையிலும், பின் ஒரு அனுபவ வீரர் என்ற அடிப்படையிலும் பந்துவீச்சாளர்களுக்கு அறிவுரை கூறுவார். அவர் சொல்வது பல முறை இந்திய அணிக்கு சாதகமாக அமையும். அனுபவ தோனியை போலவே புதிய வீரர் பண்ட் அறிவுரை கூறுவது கொஞ்சம் அதிகப்படியாக தான் இருக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!!


Click it and Unblock the Notifications