Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus : அசர வைத்த ரிஷப் பண்ட்!! ஏபி டி வில்லியர்ஸ்-இன் உலக சாதனையை சமன் செய்தார்

அடிலெய்டு: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த முதல் டெஸ்டில் ரிஷப் பண்ட் உலக சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார்.

ரிஷப் பண்ட் இந்த போட்டியில் பேட்டிங்கில் பெரிதாக ரன் குவிக்கவில்லை. எனினும், விக்கெட் கீப்பிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்தார்.

அதன் மூலம், ஒரே டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த சாதனையை சமன் செய்துள்ளார் ரிஷப் பண்ட்.

தோனி சாதனை சமன்

தோனி சாதனை சமன்

ரிஷப் பண்ட் முதல் இன்னிங்க்ஸில் ஆறு கேட்ச் பிடித்தார். அதன் மூலம் இந்திய அளவில் தோனி ஒரே இன்னிங்க்ஸில் பிடித்திருந்த அதிக கேட்ச் சாதனையை சமன் செய்தார்.

விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்

விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்

இரண்டாவது இன்னிங்க்ஸிலும் கலக்கிய ரிஷப் பண்ட், இதில் ஐந்து கேட்ச் பிடித்தார். ஒரே போட்டியில் 11 கேட்ச் பிடித்து தன் விக்கெட் கீப்பிங் மீது இருந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்தார்.

உலக சாதனையை சமன் செய்தார்

உலக சாதனையை சமன் செய்தார்

அதே சமயம், ஒரே டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்த ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இங்கிலாந்தின் ஜாக் ரஸ்ஸல் செய்து இருந்த உலக சாதனையை சமன் செய்தார். இவர்கள் மூவரும் தற்போது ஒரே டெஸ்ட் போட்டியில் 11 கேட்ச் பிடித்து சாதனை செய்துள்ளனர்.

இந்திய அளவில் முதல் இடம்

மேலும், இந்திய அளவில் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். முன்பு வ்ரித்திமான் சாஹா ஒரே போட்டியில் 10 கேட்ச்கள் பிடித்து இருந்ததே சாதனையாக இருந்தது.

Story first published: Monday, December 10, 2018, 12:46 [IST]
Other articles published on Dec 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+