Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Rishabh Pant Sledging: பேசிப் பேசியே வெறுப்பேற்றிய ரிஷப் பண்ட்! ஆஸி. வீரர்கள் ரொம்ப பாவம்

Recommended Video

ஆஸ்திரேலியாவை பேசிப் பேசியே வெறுப்பேற்றிய ரிஷப் பண்ட்- வீடியோ

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை.

ஆனால், விக்கெட் கீப்பிங்கில் இருந்து கொண்டு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கடுப்பேத்திக் கொண்டே இருந்தார்.

கவாஜா கிண்டல்

கவாஜா கிண்டல்

முதல் இன்னிங்க்ஸில் உஸ்மான் கவாஜா கட்டை போட்டு பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். அப்போது ரிஷப் பண்ட், "எல்லோரும் புஜாரா மாதிரி ஆகி விட முடியாது" என்று கூறி உஸ்மான் கவாஜாவை கிண்டல் செய்தார்.

வெற்றி பெற எண்ணம் இல்லை

வெற்றி பெற எண்ணம் இல்லை

பின்னர், ஆஸ்திரேலியா விக்கெட்களை இழந்து கொண்டு இருந்த போது, "உங்களுக்கு வெற்றி பெறணும்னு எண்ணம் இல்லை" எனக் கூறி வெறுப்பேற்றினார். மேலும், அஸ்வின் பந்து வீச வந்த போது, "சீக்கிரம் இவங்க விக்கெட் எடுங்க" எனவும் கூறினார்.

பழி தீர்த்தார்

பழி தீர்த்தார்

ஆஸ்திரேலியா கடைசி நேரத்தில் தோல்வியை தவிர்க்க போராடியது. அப்போது பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ்-ஐ ஸ்லெட்ஜிங் செய்தார் ரிஷப். பாட் கம்மின்ஸ் முதல் இன்னிங்க்ஸ்-இன் போது ரிஷப் பண்ட்டை வம்பிழுத்தார். அதற்கு இப்போது பழி வாங்கினார் பண்ட்.

சாதனையும் செய்தார்

சாதனையும் செய்தார்

ரிஷப் பண்ட் முதல் டெஸ்டில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தார். இந்திய அளவில் ஒரே இன்னிங்க்ஸில் ஆறு கேட்ச் பிடித்த தோனியின் சாதனையை சமன் செய்தார் பண்ட். பேட்டிங்கில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனினும், கீப்பிங்கில் கலக்கியதோடு, ஆஸ்திரேலிய வீரர்களை பேசிப் பேசியே கடுப்பேற்றி இந்தியாவின் வெற்றிக்கு வேறு வகையிலும் காரணமாக அமைந்துள்ளார் பண்ட்.

Story first published: Monday, December 10, 2018, 12:48 [IST]
Other articles published on Dec 10, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+