For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus: ஆஸி. பம்மி பம்மி ஆடி நான் பார்த்ததே இல்லை! அஸ்வினை பாராட்டிய சச்சின்

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியா பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தியது.

அஸ்வின் டாப்-ஆர்டரில் மூன்று விக்கெட்களை வீழ்த்தியதால் ஆஸ்திரேலிய அணி மேற்கொண்டு விக்கெட்களை இழக்காமல் இருக்க தடுப்பாட்டம் ஆடியது.

இதை கண்டு ஆச்சரியப்பட்ட சச்சின், ஆஸ்திரேலிய அணியை பம்மி பதுங்க வைத்த அஸ்வின் மற்றும் அணியை பாராட்டியுள்ளார்.

இந்திய பந்துவீச்சு எப்படி?

இந்திய பந்துவீச்சு எப்படி?

முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 250 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி மூன்றாவது பந்தில் இஷாந்த் பந்துவீச்சில் ஆரோன் பின்ச்சை இழந்தது. அடுத்த மூன்று விக்கெட்களை அள்ளினார் அஸ்வின்.

ஆஸ்திரேலியா மந்த ஆட்டம்

ஆஸ்திரேலியா மந்த ஆட்டம்

அஸ்வின் பந்தில் சுத்தமாக ரன் எடுக்கவில்லை ஆஸ்திரேலிய வீரர்கள். அவரது பந்துவீச்சில் ஓவருக்கு 1.51 ரன் மட்டுமே எடுத்தனர். அது போல பும்ரா ஓவர்களில், ஓவருக்கு 1.70 ரன்கள் மட்டுமே எடுத்தனர். முதல் இன்னிங்க்ஸில் ஆஸ்திரேலியா 88 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதாவது, ஓவருக்கு 2.17 ரன்கள். ஆஸ்திரேலியா படு மந்தமாக பேட்டிங் ஆடி வருகிறது.

சச்சினின் ஆச்சரிய பதிவு

ஆஸ்திரேலியா இப்படி பம்மி, பம்மி ஆடுவதை பார்த்த சச்சின், தன் அனுபவத்தில் ஆஸ்திரேலிய அணி இப்படி தடுப்பாட்டம் ஆடி நான் பார்த்ததே இல்லை. இந்தியா இந்த சூழ்நிலையை மொத்தமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார் சச்சின்.

அஸ்வினுக்கு பாராட்டு

அஸ்வினுக்கு பாராட்டு

மேலும், அஸ்வின் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார், அணியை மேலே கொண்டு செல்ல உதவியுள்ளார் என அஸ்வினை பாராட்டி உள்ளார் சச்சின். அஸ்வின் டாப்-ஆர்டர் விக்கெட்களை எடுத்த பின்னரே ஆஸ்திரேலியா மொத்தமாக தடுப்பாட்டத்திற்கு மாறியது.

போட்டி எப்படி செல்லும்?

போட்டி எப்படி செல்லும்?

இந்த போட்டியில் தற்போது இரு அணிகளும் ஓரளவு சம நிலையிலேயே உள்ளன. ஆஸ்திரேலியா இந்தியாவை விட 59 ரன்கள் பின் தங்கி உள்ளது. கையில் 3 விக்கெட்கள் உள்ளது. மூன்றாம் நாள் ஓரளவு ரன்கள் குவித்தால் கூட ரன் வித்தியாசம் குறைந்து விடும். இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டமே, வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் என தெரிகிறது.

Story first published: Friday, December 7, 2018, 20:38 [IST]
Other articles published on Dec 7, 2018
English summary
India vs Australia First Test : Sachin admire Ashwin and India’s bowling effort and says he never seen defensive mindset of Australians
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+