For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி.வோட நிலைமை இப்படி ஆகிப் போச்சே.. சுட்டிக் காட்டி விமர்சனம் செய்த கங்குலி

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் இறுதிப் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இரு அணிகளிலும் அணித் தேர்வில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் அணித் தேர்வு அதல பாதாளத்தை தொட்டு இருப்பதாக கூறியுள்ளார் கங்குலி.

தொடரில் முன்னிலை

தொடரில் முன்னிலை

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. நான்காவது மற்றும் கடைசி போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் இந்தியா தொடரை 3-1 என கைப்பற்றும். தொடரை வெல்ல முடியாவிட்டாலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் சமன் செய்ய முடியும்.

சிட்னி ஆடுகளம்

சிட்னி ஆடுகளம்

தற்போதைய சூழ்நிலையில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை சமன் செய்வதே பெரிய சாதனை தான். சிட்னி ஆடுகளம் சுழற் பந்துவீசுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கூடுதல் சுழற்பந்துவீச்சாளர்களை இரு அணிகளும் களமிறக்கும் என யூகங்கள் கிளம்பியுள்ளன.

அணித் தேர்வு குழப்பம்

அணித் தேர்வு குழப்பம்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாஹ் போன்றோர் எந்த 11 வீரர்களை களமிறக்க வேண்டும் என தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆஸ்திரேலியா வெற்றி பெற முடியாமல் துவண்டுள்ள நிலையில், முன்னாள் வீரர்கள் வெற்றி பெற வேண்டுமே என்ற எண்ணத்தில் தாங்களே அணியை தேர்வு செய்து அதை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கங்குலி விமர்சனம்

இதை தான் கங்குலி விமர்சித்துள்ளார். குறிப்பாக ஸ்டீவ் வாஹ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 11 வீரர்களின் பெயரை எழுதி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். அதை தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ள கங்குலி, ஆஸ்திரேலிய அணித் தேர்வு அதன் பாதாளத்தில் இருக்கிறது. முக்கிய முன்னாள் வீரர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பதிவில் அணியை வெளியிட்டு வழி சொல்ல வேண்டிய நிலைமையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஸ்டீவ் வாஹ் சொல்லும் அணி

ஸ்டீவ் வாஹ் வெளியிட்டுள்ள பதிவில் இந்த 11 வீரர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. ஹாரிஸ், ஷான் மார்ஷ், கவாஜா, ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன், லாபுசாக்னே, மிட்ச் மார்ஷ், கம்மின்ஸ், ஸ்டார்க், நாதன் லியோன், ஹேசல்வுட்.

Story first published: Tuesday, January 1, 2019, 11:48 [IST]
Other articles published on Jan 1, 2019
English summary
India vs Australia : Ganguly says Australian team selection at its lowest ever, after former players suggesting playing XI for the Sydney tests.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+