Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுன்சர் தாக்குதல் நடத்திய ஆஸி. வீரர் கம்மின்ஸ்.. அடி வாங்கிய ஹனுமா.. சமாளித்த மாயன்க்

மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் துவக்க வீரராக முதன் முறையாக களம் இறங்கிய ஹனுமா விஹாரி கம்மின்ஸ் வீசிய பவுன்சரை சமாளிக்க முடியாமல் திணறினார்.

கம்மின்ஸ் வீசிய ஒரு பவுன்சர் அவரது ஹெல்மட்டை கடுமையாக தாக்கியது. எனினும், அவருக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.

துவக்கத்திற்கு அறிமுகம்

துவக்கத்திற்கு அறிமுகம்

மூன்றாவது டெஸ்டில் இந்திய அணிக்கு மாயன்க் அகர்வால் - ஹனுமா விஹாரி துவக்கம் அளித்தனர். இருவருமே முதன்முறையாக டெஸ்ட் அணியில் துவக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மாயன்க்-க்கு இது தான் சர்வதேச அறிமுகம்.

பவுன்சர் தாக்குதல்

பவுன்சர் தாக்குதல்

இருவருமே அறிமுக வீரர்கள் என்பதால் அவ்வப்போது தாக்குதல் பாணி பந்துவீச்சை கையாண்டார் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ். 13வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பந்தை கண்டு திணறிய ஹனுமா, கீழே குனிந்து பந்தில் இருந்து தப்பிக்க நினைத்தார், எனினும், பந்து அவரது ஹெல்மட்டை கடுமையாக தாக்கியது.

பரிசோதனை செய்தனர்

உடனடியாக இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் விரைந்து வந்து அவரை சோதித்தார். சில நிமிடங்கள் நீடித்த சோதனைக்கு பின் ஹனுமா விஹாரி மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்தார். கம்மின்ஸ் இவரது பலவீனத்தை பயன்படுத்த முடிவு செய்து மீண்டும் அதே போன்ற பந்தை சில ஓவர்கள் கழித்து வீசினார்.

பவுன்சரில் கேட்ச் கொடுத்தார்

பவுன்சரில் கேட்ச் கொடுத்தார்

19வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய பவுன்சரில் ஹனுமா விஹாரி ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 66 பந்துகளை சந்தித்த ஹனுமா விஹாரி வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். மாயன்க் அகர்வாலையும் பவுன்சர்கள் வீசி தாக்கினர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்.

மாயன்க் அசத்தல் அரைசதம்

மாயன்க் அசத்தல் அரைசதம்

எனினும், மாயன்க் சமாளித்து ஆடி 76 ரன்கள் அடித்தார். தன் அறிமுகப் போட்டியிலேயே அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்துள்ளார். புஜாரா மற்றும் கோலி அடுத்து நிலைத்து நின்று ஆடி வருகின்றனர். இந்தியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் சேர்த்துள்ளது.

Story first published: Wednesday, December 26, 2018, 15:45 [IST]
Other articles published on Dec 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+