Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் ஒழுங்கா ஆடலைன்னா ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் 2 பேருக்கும் வாய்ப்பு கிடைக்கும்!

இவர் ஒழுங்கா ஆடலைன்னா ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் 2 பேருக்கும் வாய்ப்பு கிடைக்கும்!

மும்பை : இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடரில் தான் தினேஷ் கார்த்திக், ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்டின் உலகக்கோப்பை இடம் உறுதி செய்யப்பட உள்ளது. இது குறித்து ஹர்பஜன் தன் கருத்துக்களை கூறி இருக்கிறார்.

யாருக்கு இடம்?

யாருக்கு இடம்?

மாற்று துவக்க வீரராக ராகுலும், மாற்று விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்தப்பட்டு பார்க்கப்பட உள்ளனர். இவர்களில் இருவருக்கு மட்டுமே உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என யூகிக்கப்படுகிறது.

ராகுல் சொதப்பினால்..

ராகுல் சொதப்பினால்..

இவர்களது அணி வாய்ப்பு குறித்து பேசிய ஹர்பஜன் சிங், "ஆஸ்திரேலிய தொடர் தான் ரிஷப் பண்ட் மற்றும் ராகுலுக்கு அணியில் தங்கள் இடங்களை உறுதி செய்ய கிடைத்த வாய்ப்பு. ஒருவேளை ராகுல் ரன் குவிக்கவில்லை என்றால் ரிஷப் பண்ட் துவக்க வீரராகவும், தினேஷ் கார்த்திக் அணியில் தன் இடத்தையும் தக்க வைத்துக் கொள்ளலாம்" என கூறினார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைக்கவில்லை

தினேஷ் கார்த்திக் கடந்த வருடம் மிக சிறப்பாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் செயல்பட்டார். எனினும், அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வருவதும், போவதுமாகவே இருந்தார்.

தினேஷ் - ரிஷப் பண்ட் போட்டி

தினேஷ் - ரிஷப் பண்ட் போட்டி

ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு பாதியில் தான் இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைந்தார், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவருக்கும் நிலையான வாய்ப்பு கிடைக்கவில்லை. தினேஷ் - ரிஷப் பண்ட் இடையே ஆன இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான போட்டி உலகக்கோப்பை அணி வரை வந்து நிற்கிறது.

இருவரும் ஆட முடியுமா?

இருவரும் ஆட முடியுமா?

தேர்வாளர்கள் இன்னும் இருவரில் ஒருவரை தேர்வு செய்யவில்லை. கவாஸ்கர் போன்றோர், இவர்கள் இருவரையும் உலகக்கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஹர்பஜன் கூறுவதை வைத்துப் பார்த்தால் ராகுல் சொதப்பினால் மட்டுமே அது நடக்கும் என தெரிகிறது.

Story first published: Saturday, February 23, 2019, 18:25 [IST]
Other articles published on Feb 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+