Ind vs Aus: கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு உதைக்குதே.. பெர்த் மைதானம் இந்தியாவுக்கு ராசி இல்லையோ?
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்து இரண்டாவது டெஸ்ட்டில் பலவீனமான ஆஸ்திரேலிய அணியை வெற்றி கொள்ளும் முனைப்புடன் உள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் மைதானத்தில் இந்திய அணி எத்தனை வெற்றி, தோல்விகள் பெற்றுள்ளது என பார்த்தால், அது இந்திய அணிக்கு சாதகமாக இல்லை.

பெர்த்தில் 4 டெஸ்ட் போட்டிகள்
இந்திய அணி இதுவரை பெர்த்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. 1977, 1992 ஆகிய ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது. 2008 அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 72 ரன்களில் வெற்றி பெற்றது. 2012இல் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா மிக மோசமாக ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 37 ரன்களில் தோல்வி அடைந்தது.

அடிலெய்டில் வரலாறு மாறியது
பெர்த் நமக்கு ராசி இல்லையோ என நினைத்தால், முதல் டெஸ்ட் வெற்றிக்கு முன்பு வரை அடிலெய்டில் நடந்த 11 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்று இருந்தது. ஒரேடியாக சொல்ல வேண்டும் என்றால் ஆஸ்திரேலியாவில் இந்தியா வெல்வதே அபூர்வம் தான். ஆனால், இப்போதுள்ள ஆஸ்திரேலிய அன்யோ பலவீனமாக் இருப்பதால் இந்தியா எளிதாக வெல்லும் என கணிக்கலாம். பழைய கணக்குகள் இந்தியாவிற்கு பாதகமாக இருந்தாலும், அதை எல்லாம் இந்த முறை இந்தியா மாற்ற அதிக வாய்ப்புள்ளது.

பெர்த் ஆடுகளம் எப்படி?
பெர்த் ஆடுகளம் இந்த முறை முழுவதுமாக புதிதாக வடிமைக்கப்படுள்ளது. அதனால், இரு அணிகளுக்குமே ஆடுகளம் புது அனுபவமாகவே இருக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த ஆடுகளம் அதிக வேகம் மற்றும் பவுன்ஸ் நிறைந்து காணப்படும். அதற்கேற்ப இரு அணிகளுமே வேகப் பந்துவீச்சாளர்களை சார்ந்து திட்டம் தீட்டி வருகின்றன.

இந்திய அணி சமாளிக்குமா?
ஆஸ்திரேலிய வேகக் கூட்டணியான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ்-ஐ இந்தியா சமாளிக்குமா? என்பதே பெர்த் டெஸ்டில் முக்கிய விஷயமாக இருக்கும். இந்திய அணியிலும் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் களம் இறங்க அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications