For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா- ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம்; நாளை மோதல்

By Mayura Akilan

அடிலெய்ட்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெறவுள்ள, பயிற்சி ஆட்டங்களின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவும், போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியாவும் நாளை மோதவுள்ளன.

ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற பிப்ரவரி 14 ஆம்தேதி முதல் மார்ச் 29ஆம் தேதிவரை நடைபெற உள்ளன.

India vs Australia ICC Cricket World Cup 2015 warm-up match at Adelaide

இந்த போட்டியில் இந்தியா பி- பிரிவில் இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தானுடன் இந்த உலக கோப்பையில் இந்தியா தனது முதல் போட்டியை சந்திக்க உள்ளது. பிப்ரவரி 15-ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

இரு அணிகள் இடையில் நடைபெறும் லீக் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை எந்த ஒரு போட்டிக்கும் இல்லாத வண்ணம் வெறும் 20 நிமிடங்களிலே விற்று தீர்ந்தது.

முன்னதாக உலக இந்திய அணி அடிலெய்டில் நடைபெறும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவையும், 10ஆம் தேதி ஆப்கானிஸ்தானையும் சந்திக்கிறது.

பிப்ரவரி 8ஆம்தேதி முதல் 13ஆம்தேதி வரை மொத்தம் 14 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அடிலெய்ட்,கிறிஸ்ட் சர்ச்,மெல்போர்ன், சிட்னி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

இதில் இந்தியா-ஆஸ்திரேலியா உடனான பயிற்சி ஆட்டம் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தை கண்டுகளிப்பதற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.

இது குறித்து ஐசிசி அதிகார பூர்வ இணையதளத்தில் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் 8ஆம்தேதி ஞாயிறு நடைபெறும் இந்தியா- ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்ட போட்டிக்கான டிக்கெட்டுகள் இல்லை. அதுபோல் பாகிஸ்தான் வங்காளதேசம் இடையேயான சிட்னியில் நடைபெறும் போட்டிகான டிக்கெட்டுகளும் இல்லை என்றால் ரசிகர்கள் ஒப்பு கொள்ளாமல் திரும்ப திரும்ப டிக்கெட் கேட்கிறார்கள் என கூறப்பட்டு உள்ளது.

போட்டி அமைப்பாளர்கள் கூறும் போது ரசிகர்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் பயிற்சி ஆட்ட போட்டிகள் பார்ப்பதற்கு இலவசம் என்றாலும் உள்ள நுழைவதற்கு ஒரு டிக்கெட் வாங்க வேண்டும் என கூறி உள்ளனர்.

சில பயிற்சி ஆட்டங்களுக்கு டிக்கெட்டுகள் இன்னும் உள்ளன அதை ரசிகர்கள் cricketworldcup.com. இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என தெரிவித்து உள்ளனர்.

Story first published: Saturday, February 7, 2015, 18:04 [IST]
Other articles published on Feb 7, 2015
English summary
Defending champions India will be under pressure when they take on an in-form Australian side in their own backyard - at the Adelaide Oval - in the first of the two warm-up matches of the ICC Cricket World Cup 2015 on Sunday. India's second warm-up match before the start of the tournament will be against Afghanistan on February 13
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X