Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4வது டெஸ்டில் இந்தியா ஜெயிக்கணுமா? கோலி டாஸ் மட்டும் ஜெயிச்சா போதும்.. எப்படி தெரியுமா?

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் கோலி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதில் மும்முரமாக இருக்கிறார். மூன்று போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது.

இந்தியா நான்காவது மற்றும் கடைசி டெஸ்டில் டிரா அல்லது வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா தொடரை கைப்பற்ற முடியும். இந்நிலையில், கோலியின் டாஸ் வெற்றி பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

21 டாஸ் வெற்றி

21 டாஸ் வெற்றி

கோலி இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இதில் 21 முறை டாஸ் வென்றுள்ளார் கோலி. இந்த 21 போட்டிகளில் 18 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் டிரா செய்துள்ளது.

டாஸ் ராசியில்லை

டாஸ் ராசியில்லை

இதில் இருந்து கோலி டாஸ் வென்றாலே தோல்வி அடையாது என்ற நிலை உள்ளது. எனினும், 2018ஆம் ஆண்டு கோலிக்கு டெஸ்ட் போட்டிகளில் டாஸ் ராசியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

டெஸ்ட் தோல்விகள்

டெஸ்ட் தோல்விகள்

இந்தியா இந்த ஆண்டு துவக்கத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என தோல்வி அடைந்தது. இங்கிலாந்தில் 4-1 என தோல்வி அடைந்தது. தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த தோல்விகளில் எல்லாம் கோலி டாஸ் தோற்றுள்ளார்.

இங்கிலாந்து சோகம்

இங்கிலாந்து சோகம்

குறிப்பாக ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஐந்து முறையும் கோலி டாஸில் தோல்வி அடைந்தார். அப்போது வெறுப்பில் "டாஸின் இரண்டு பக்கமும் தலை இருந்தால் தான் நான் வெற்றி பெற முடியும் போல" என கூறினார்.

கோலி டாஸ் வெல்ல வேண்டும்

கோலி டாஸ் வெல்ல வேண்டும்

இந்த தகவலை கேட்டவுடன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை கைப்பற்ற நான்காவது டெஸ்டில் கோலி டாஸ் வெல்ல வேண்டுமே என்ற எண்ணம் வருவதை தடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா இதுவரை டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 1, 2019, 18:46 [IST]
Other articles published on Jan 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+