For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அணியை கரை சேர்த்த தோனி, ஜாதவ்.. விக்கெட்களை அள்ளிய சாஹல் .. ஆஸி. தொடரை வென்ற இந்தியா

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாம் ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது போட்டியில் இந்திய அணியின் சாஹல் 6 விக்கெட் அள்ளினார். பேட்டிங்கில் தோனி மீண்டும் ஒரு அரைசதம் அடித்தார். ஜாதவ் அவருக்கு கை கொடுக்க இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

தொடர் வெற்றி யாருக்கு?

தொடர் வெற்றி யாருக்கு?

இந்த போட்டிக்கு முன்னதாக, இந்தியா - ஆஸ்திரேலியா இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்தன. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இந்த போட்டி பரபரப்பாக இருந்தது.

மூன்று வீரர்கள் உள்ளே

மூன்று வீரர்கள் உள்ளே

இந்திய அணியில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடாத மூன்று வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். சிராஜ், அம்பதி ராயுடு மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு விஜய் ஷங்கர், கேதார் ஜாதவ் மற்றும் சாஹல் அணியில் இடம் பெற்றனர்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி, கேதார் ஜாதவ், தோனி, தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஷமி, சாஹல்

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

டாஸ் வென்ற இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் துவக்க வீரர்களின் விக்கெட்களை எடுத்து அசத்தினார். அடுத்து சாஹல் தன் சுழல் வித்தையை காட்டினார். வரிசையாக 6 விக்கெட்களை அள்ளினார் அவர். ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 230 ரன்கள் மட்டுமே அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய இந்திய அணியில் ரோஹித் 9, தவான் 23 ரன்களில் வெளியேறி சுமாரான துவக்கம் அளித்தனர். அடுத்து கோலி - தோனி இணைந்து அணியை மீட்டனர். கோலி 46 ரன்களில் வெளியேறினார். அடுத்து தோனி - ஜாதவ் இணைந்து கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்தனர். தோனி 87, ஜாதவ் 61 ரன்கள் அடித்து கடைசி வரை நங்கூரமாக நின்றனர்.

இந்தியா தொடரில் வெற்றி

இந்தியா தொடரில் வெற்றி

இந்த போட்டியின் வெற்றி மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது இந்தியா. தொடர் நாயகனாக தோனி அறிவிக்கப்பட்டார். தோனி மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, January 18, 2019, 16:53 [IST]
Other articles published on Jan 18, 2019
English summary
India vs Australia : India - australia 3rd ODI live score. India won the toss and chose bowling.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+