Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு எதிரான 6வது ஒருநாள் போட்டி: 50 ஓவர் முடிவில் ஆஸி 350/6

நாக்பூர்: இந்தியாவுக்கு எதிரான 6வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன்களைக் குவித்தது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களில் 2-ல் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றன. அடுத்த இரு ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டன.

George Bailey

இத் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 6-வது ஒரு நாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

22வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 89 ரன்களை எடுத்திருக்கிறது ஆஸ்திரேலியா அணி. 50ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா அணி.

அந்த அணியில் பெய்லி 111 பந்துகளில் 154 ரன்களும், வாட்சன் 94 பந்துகளில் 102 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Wednesday, October 30, 2013, 17:04 [IST]
Other articles published on Oct 30, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+