For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆத்தாடி! 5வது போட்டியில் இந்தியா ஜெயிக்கலைனா வரலாறே மாறிடும்! ஒழுங்கா ஆடுங்கப்பா!

டெல்லி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன ஐந்தாவது ஒருநாள் போட்டி டெல்லியில் மார்ச் 13 அன்று நடைபெற உள்ளது.

முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் இரு போட்டிகளை வென்று தொடரில் சம நிலையில் உள்ளன. இந்த போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்ற நிலை உள்ளது.

மோசமான பதிவு

மோசமான பதிவு

ஐந்தாவது போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தால், தொடரை இழப்பதுடன் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இதுவரை செய்யாத ஒரு மோசமான பதிவையும் செய்யும். அதே போல, ஆஸ்திரேலிய அணி தான் இதுவரை செய்யாத சாதனை ஒன்றை செய்யும்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

இதுவரை இந்திய அணி 2-0 என ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்ற பின் தொடரை இழந்ததில்லை. அதே போல ஆஸ்திரேலிய அணியும் இதுவரை 0-2 என ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்த பின் அந்த தொடரை வென்றதில்லை.

இந்தியாவிற்கு சாதகம்

இந்தியாவிற்கு சாதகம்

ஆனால், மற்றொரு விஷயம் இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது. கடந்த 2015 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்தியா ஒருநாள் தொடர்களின் முடிவை நிர்ணயிக்கும் போட்டிகளில் எட்டில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளது.

ராசியான மைதானம்

ராசியான மைதானம்

அதே போல, ஐந்தாவது போட்டி நடைபெற உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இந்தியா 19 போட்டிகளில் 12 வெற்றிகள் பெற்றுள்ளது. இதே மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது.

10 ஆண்டுகளாக..

10 ஆண்டுகளாக..

மறுபுறம், ஆஸ்திரேலிய அணி கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதில்லை என்ற நிலை இருக்கிறது. அதை முறியடிக்க அந்த அணி முயலும். யாருக்கு வெற்றி கிடைக்கிறது என பார்க்கலாம்!

Story first published: Tuesday, March 12, 2019, 18:10 [IST]
Other articles published on Mar 12, 2019
English summary
India vs Australia : India under risk of registering unwanted record in 5th ODI
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X