For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. பிரதமரோடு பவ்யமாக போஸ் கொடுத்த இந்திய வீரர்கள்.. அலப்பறை செய்த ரவி சாஸ்திரி

சிட்னி : ஆஸ்திரேலிய பிரதமர் அளித்த புத்தாண்டு விருந்தில் இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பவ்யமாக நின்று போஸ் கொடுத்தனர். இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அங்கேயும் தன் அலப்பறையை தொடர்ந்தார்.

புத்தாண்டு விருந்து

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது சிட்னி கிர்ரிபில்லி வீட்டில் இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு புத்தாண்டு விருந்து அளித்தார். அதில் இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர்.

கிரே நிற மேலாடை

கிரே நிற மேலாடை

இந்திய அணியில் சில வீரர்கள் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் கிரே நிற மேலாடை அணிந்து இருந்தனர். உமேஷ் யாதவ், ஹர்திக் பண்டியா, ரிஷப் பண்ட் ஆகியோர் மட்டும் நீல நிற மேலாடை அணிந்து இருந்தனர். அணியாக இவர்கள் அனைவரும் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கேப்டன்கள் மட்டும்

கேப்டன்கள் மட்டும்

அதே போல, இந்திய கேப்டன் கோலி மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் இருவரும் பிரதமருடன் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இவர்கள் இருவரும் இரண்டாவது டெஸ்டின் போது பல முறை ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொப்பியுடன் ரவி சாஸ்திரி

தொப்பியுடன் ரவி சாஸ்திரி

எல்லாம் சரியாக இருக்க ரவி சாஸ்திரி தொப்பி அணிந்து கொண்டு இந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். இந்திய அணியினர் பிரதமரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் அவர் மட்டும் தன் கண்களை மறைக்கும் வகையில் தொப்பி அணிந்து கொண்டு போஸ் கொடுத்தார்.

மரியாதை குறைவான செயல்

ஒரு நாட்டின் பிரதமரோடு எடுத்துக் கொள்ளும் புகைப்படத்தில் தொப்பியோடு நிற்பது மரியாதை குறைவான செயல் என சில ரசிகர்கள் இணையத்தில் சுட்டிக் காட்டினர். ரவி சாஸ்திரி தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேச்சு அல்லது செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த உடன் ரவி சாஸ்திரி பீர் அருந்திக் கொண்டு இருந்ததை சில ரசிகர்கள் சுட்டிக் காட்டினர். அதை தொடர்ந்து தற்போது இந்த தொப்பி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரோஹித் சர்மா எங்கே?

ரோஹித் சர்மா எங்கே?

இந்த விருந்தில் ரோஹித் சர்மா கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து இந்தியாவுக்கு விரைந்துள்ளார். அவர் நான்காவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.

Story first published: Tuesday, January 1, 2019, 16:48 [IST]
Other articles published on Jan 1, 2019
English summary
India vs Australia : Indian cricketers visited Australian PM’s house at New Year’s day
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+