Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. மற்றும் நியூசிலாந்து ஒருநாள், டி20-க்கான இந்திய அணி அறிவிப்பு.. யார் உள்ளே, யார் வெளியே?

மும்பை : அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தொடருக்கு பின் நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பைக்கு முன் இந்தியா ஆடவுள்ள கடைசி ஒருநாள் தொடர்கள் என்பதால் இந்த தொடர்களுக்கான இந்திய அணி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கேப்டன், துணை கேப்டன் யார்?

கேப்டன், துணை கேப்டன் யார்?

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களுக்கு இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து டி20 தொடருக்கான அணியில், ஒருநாள் அணியில் இருந்து சில மாற்றங்கள் உள்ளது. கோலி மற்றும் ரோஹித் இரண்டு அணிகளுக்குமே கேப்டன் மற்றும் துணை கேப்டனாக தொடர்கின்றனர்.

ஒருநாள் அணி மாற்றங்கள்

ஒருநாள் அணி மாற்றங்கள்

ஒருநாள் அணியில் ஹர்திக் பண்டியா, தினேஷ் கார்த்திக், ஷமி ஆகியோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் அறிமுகமான ரிஷப் பண்ட் அணியில் தன் இடத்தை இழந்துள்ளார், மனிஷ் பாண்டேவுக்கும் இடம் மறுக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவும் ஒருநாள் அணியில் இல்லை.

டி20 அணியில் மீண்டும் தோனி

டி20 அணியில் மீண்டும் தோனி

டி20 அணியில் தோனி மீண்டும் இடம் பிடித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய டி20 தொடர்களில் இடம் பெறாத தோனி மீண்டும் இடம் பிடித்து ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளார். ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவருமே அணியில் இடம் பிடித்துள்ளனர். ஹர்திக் பண்டியா காயத்திற்குப் பின் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அணி - ஆஸி. & நியூசி. ஒருநாள் தொடர்

இந்திய அணி - ஆஸி. & நியூசி. ஒருநாள் தொடர்

இந்திய ஒருநாள் அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே எல் ராகுல், ஷிகர் தவான், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது, முஹம்மது ஷமி.

இந்திய அணி - நியூசிலாந்து டி20 தொடர்

இந்திய அணி - நியூசிலாந்து டி20 தொடர்

இந்திய டி20 அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே எல் ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, கலீல் அஹ்மது.

Story first published: Monday, December 24, 2018, 19:04 [IST]
Other articles published on Dec 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+