Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது சச்சின் போட்ட ஜெர்சி ஆச்சே.. வைரல் ஆன இந்திய அணியின் புதிய ஜெர்சி.. கோலி எப்படி இருக்காரு?

துபாய் : இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2020 ஐபிஎல் தொடரில் ஆடி முடித்த கையோடு ஆஸ்திரேலியா கிளம்பி உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது இந்திய அணி.

இதில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து பங்கேற்க உள்ளனர்.

நீண்ட கிரிக்கெட் தொடர்

நீண்ட கிரிக்கெட் தொடர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நீண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளன. நவம்பர் 27இல் ஒருநாள் தொடர் துவங்குகிறது. அதைத் தொடர்ந்து டி20 தொடரும், டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளது. ஜனவரி இரண்டாவது வாரம் வரை இந்த தொடர்கள் நடக்கும்.

ஆஸ்திரேலிய அணியின் உடை

ஆஸ்திரேலிய அணியின் உடை

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தங்கள் அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான புதிய ஆடையை அறிமுகம் செய்தது. அது பாரம்பரியமிக்க ஆடை என அழைக்கப்படுகிறது. அந்த ஆடை குறித்து நேற்று கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரவலாக பேசப்பட்டது.

வதந்தி

வதந்தி

தற்போது இந்திய அணியும் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுவும் இந்திய அணியின் பழைய உடையின் வடிவமைப்பை லேசாக மாற்றி அமைத்து அதையே ஆஸ்திரேலிய தொடரில் பயன்படுத்த உள்ளதாக வதந்தி கிளம்பியுள்ளது.

1992 உலகக்கோப்பை ஜெர்சி

1992 உலகக்கோப்பை ஜெர்சி

அந்த ஜெர்சி குறித்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வலம் வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் அது 1992இல் பயன்படுத்தப்பட்ட ஜெர்சி என கூறி வருகின்றனர். 1992 உலகக்கோப்பை தொடரில் சச்சின் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அந்த உடையை தான் அணிந்து போட்டிகளில் பங்கேற்றனர்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

முன்னாள் இந்திய வீரர்கள் அணிந்த அதே வடிவமைப்பை கொண்ட ஜெர்சியில் தற்போதைய வீரர்கள் எப்படி காட்சி அளிப்பார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அது தொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதமும் நடந்து வருகிறது.

விராட் கோலி எப்படி இருக்கிறார்?

விராட் கோலி எப்படி இருக்கிறார்?

சில ரசிகர்கள் விராத் கோலிக்கு போட்டோஷாப்பில் அந்த உடையை அணிவித்துப் பார்த்து, கோலி எப்படி இருக்கிறார் பாருங்கள்? என பதிவிட்டு வருகின்றனர். சூப்பராக இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர். சிலர் நன்றாக இல்லை என கமெண்ட் செய்துள்ளனர்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் முடிந்த உடன் இந்திய அணி நான்கு போட்டிகள் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதுதான் இந்த சுற்றுப்பயணத்தில் முக்கியமான தொடராகும். டெஸ்ட் போட்டிகளில் வெள்ளை உடை அணிந்தே வீரர்கள் பங்கேற்பார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.

Story first published: Thursday, November 12, 2020, 15:27 [IST]
Other articles published on Nov 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+