Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டி20 போட்டியில் கருப்பு பட்டை அணிந்து மரியாதை.. ஒரு நிமிட மௌன அஞ்சலி!

விசாகப்பட்டினம் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டி20 போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினார்கள்.

கடந்த வாரம் காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்திய படை வீரர்கள் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மரியாதை

மரியாதை

வீர மரணமடைந்த இந்திய படை வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியினர் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து முதல் டி20 போட்டியில் பங்கேற்றனர்.

அஞ்சலி

மேலும், இரு அணிகளின் தேசிய கீதம் இசைத்து முடித்த பின்னர் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரு அணி வீரர்கள், அணி உதவியாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு நிமிடம் மௌனம் காத்தனர்.

ஆடாதே!

ஆடாதே!

இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் ஆடக் கூடாது, குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் ஆடக் கூடாது என்ற பேச்சுக்கள் வலுத்து வருகிறது.

சர்ச்சை

சர்ச்சை

இதனால், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காரணத்தால், இந்திய அணியினரையும், அவர்களது செயல்பாடுகளையும் பலரும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

என்ன முடிவு?

என்ன முடிவு?

உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்த தெளிவான முடிவு இதுவரை எட்டப்படவில்லை. பிசிசிஐ மற்றும் மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே இந்தியா, பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுமா? என்பது தெரிய வரும்.

சச்சின், கங்குலி கருத்து வேறுபாடு

சச்சின், கங்குலி கருத்து வேறுபாடு

இதற்கிடையே, கங்குலி, ஹர்பஜன் சிங், சேத்தன் சௌஹான் போன்ற முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடக் கூடாது என்றும், சச்சின், கவாஸ்கர் போன்றோர் அந்த போட்டியில் ஆடி இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகள் பெறாமல் தடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Story first published: Sunday, February 24, 2019, 21:21 [IST]
Other articles published on Feb 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+