Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்

மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பைக்கு முன் இந்தியா பங்கேற்கவுள்ள கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பதால், இந்த தொடருக்கான இந்திய அணி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

வீரர்கள் மாற்றம்

வீரர்கள் மாற்றம்

இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடிய பல வீரர்கள் இந்த தொடரில் மாற்றப்பட்டுள்ளனர்.

மீண்டும் வந்த பும்ரா, கோலி

மீண்டும் வந்த பும்ரா, கோலி

கடந்த தொடர்களில் ஓய்வில் இருந்த பும்ரா, கோலி இருவரும் ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். முன்பு பார்ம் அவுட் ஆகி வாய்ப்பை இழந்த துவக்க வீரர் ராகுல் டி20 மற்றும் ஒருநாள் அணி இரண்டிலும் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.

வாய்ப்பை இழந்த தினேஷ் கார்த்திக்

வாய்ப்பை இழந்த தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் பெயர் ஒருநாள் போட்டி அணியில் பெறவில்லை. அதே சமயம், ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டி மற்றும் டி20 என இரண்டு அணிகளிலும் இடம் பிடித்துள்ளார். இவர்கள் இடையே இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்தை பிடிக்கும் போட்டி இருக்கிறது.

விஜய் ஷங்கர் வாய்ப்பு

விஜய் ஷங்கர் வாய்ப்பு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் ஷங்கர் இரண்டு தொடர்களுக்கான அணிகளிலும் இடம் பெற்றுள்ளார். எனினும், அவர் ஒருநாள் போட்டிகளில் களம் இறங்குவாரா என்பது தெரியவில்லை. டி20 அணியில் குல்தீப் யாதவ்வுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிய வீரர் மாயங்க் மார்கண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

டி20 தொடருக்கான இந்திய அணி

டி20 தொடருக்கான இந்திய அணி

இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ராகுல், தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, க்ருனால் பண்டியா, விஜய் ஷங்கர், சாஹல், பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கௌல், மாயங்க் மார்கண்டே

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

இந்திய அணி - விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பண்டியா, பும்ரா, முஹம்மது ஷமி, சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார் (கடைசி மூன்று போட்டிகள்), விஜய் ஷங்கர், ரிஷப் பண்ட், சித்தார்த் கௌல் (முதல் இரண்டு போட்டிகள்), ராகுல்.

Story first published: Friday, February 15, 2019, 19:31 [IST]
Other articles published on Feb 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+