Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அதிரடியா ஆட மாட்டாரா? தோல்விக்கு அவர் தான் காரணமா? சீக்கிரம் பதில் சொல்லுங்க தல!

Recommended Video

இரண்டாவது போட்டியில் தோனி அதிரடியா ஆடுவாரா?- வீடியோ

பெங்களூரு : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20யில் தோனி ஆடிய நிதான ஆட்டம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

முதல் டி20 போட்டியில் இந்தியா விக்கெட்களை இழந்து வந்த போது தோனி நிலையாக நின்று ஆடினார். எனினும், கடைசி நேரம் வரை அவர் ஒற்றை ரன்களும் ஓடாமல், பவுண்டரியும் அடிக்காமல் அனைவரையும் சோதித்தார்.

ஒற்றை ரன்கள்

ஒற்றை ரன்கள்

39 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே அடித்து கடைசி வரை தோனி ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா 7 விக்கெட்கள் இழந்த பின், சாஹலுடன் பேட்டிங் செய்த தோனி, பேட்டிங் ஸ்ட்ரைக்கில் தானே நின்று ஆடலாம் என முடிவு செய்து பல முறை ஒற்றை ரன்கள் ஓட வாய்ப்பு இருந்தும் ஓடவில்லை.

வாய்ப்பை வீணடித்தார்

வாய்ப்பை வீணடித்தார்

39 பந்துகளில் ஒரே ஒரு சிக்ஸ் மட்டுமே அடித்தார். ஒரு ஃபோர் கூட அடிக்கவில்லை. அப்படி பவுண்டரி அடிக்க முடியாத நிலையில் தோனி ஒற்றை ரன்கள் ஓட கிடைத்த வாய்ப்புகளை ஏன் வீணடித்தார் என்ற கேள்வியை விமர்சகர்கள் முன் வைக்கிறார்கள்.

இவர் தான் காரணம்

இவர் தான் காரணம்

இன்னும் ஒரு படி மேலே போய் சிலர் தோனி பொறுமையாக ஆடியதால் தான் மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் ரேட் குறைகிறது என்ற அழுத்தத்துக்கு ஆளாகி அடித்து ஆடி ஆட்டமிழந்தனர் என கூறுகிறார்கள். இதில் உண்மை இல்லை என்றாலும், தோனியின் நிதான ஆட்டமே இந்த பேச்சுக்களுக்கு காரணம்.

கலக்கல் பேட்டிங்

கலக்கல் பேட்டிங்

தோனி கடந்த ஆண்டு பேட்டிங்கில் சொதப்பினார். ஆனால், இந்த ஆண்டு அதிரடியாகவும், அணியின் வெற்றிக்கு பயன்படும் வகையிலும் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து மண்ணில் கலக்கலான ஆட்டத்தை ஆடினார்.

பார்ம் எப்படி?

பார்ம் எப்படி?

தற்போது முதல் டி20யில் கூட தோனி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது பேட்டிங் நிச்சயம் நல்ல பார்மில் உள்ளது. ஆனால், தோனியால் துடிப்பான ஆட்டம் ஆட முடியவில்லை. அதற்கு வயது முக்கிய காரணம்.

பதில் அளிப்பாரா?

பதில் அளிப்பாரா?

தோனி எப்போதும் தன் மீதான விமர்சனத்துக்கு களத்தில் சிறந்த செயல்பாடுகள் மூலம் தான் பதில் அளித்துள்ளார். தற்போது தன் மீது உள்ள புகார்களுக்கு இரண்டாம் டி20 போட்டியில் பதில் அளிக்கும் வகையில் தோனி ஆடுவாரா? என பார்க்கலாம்.

Story first published: Tuesday, February 26, 2019, 14:25 [IST]
Other articles published on Feb 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+