For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ச்சே.. இப்படி ஆகிடுச்சே!! வெற்றிக்கு பின்னும் செம கடுப்பில் இருக்கும் இஷாந்த் சர்மா.. ஏன் தெரியுமா?

அடிலெய்டு : இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 31 ரன்களில் வெற்றி பெற்றும், இஷாந்த் சர்மா கோபத்தில் இருப்பதாக தெரிவித்தார் கோலி.

அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. அதன் மூலம் பல சாதனைகளையும் செய்துள்ளது.

இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வந்தனர். ஆனால், இஷாந்த் சர்மாவுக்கு மட்டும் என்ன கோபம்?

இஷாந்த் கோபம்.. ஏன்?

இஷாந்த் கோபம்.. ஏன்?

விராட் கோலி கூறுகையில், "இஷாந்த் சர்மா தன் மீதே கடும் கோபத்தில் இருக்கிறார். நங்கள் ஏன் என்று கேட்டோம். "ஒரு மூத்த வீரராக இருந்து கொண்டு இப்படி விக்கெட் கிடைத்த பந்துகளை நோ-பால்களாக வீசி இருக்கக்கூடாது" என்றார். இஷாந்த் சர்மா முதல் டெஸ்டில் நோ பால்கள் வீசிய மூன்று பந்துகள் விக்கெட் விழ வேண்டிய பந்துகள் ஆகும்.

பின்ச் விக்கெட் போச்சு

பின்ச் விக்கெட் போச்சு

ஆஸ்திரேலிய பேட்டிங்கின் இரண்டாம் இன்னிங்க்ஸில் இஷாந்த் முதல் ஓவரை வீசினார். அதில் இரண்டாவது பந்தில் பின்ச்சுக்கு எல்,பி,டபுள்யூ முறையில் அவுட் கொடுக்கபட்டது. பின் ரிவ்யூ பார்த்ததில் அது நோ-பால் என தெரிய வந்தது. .

அடுத்து ஷான் மார்ஷ்

அடுத்து ஷான் மார்ஷ்

51வது ஓவரில் ஷான் மார்ஷ் பந்துவீச்சில் மீண்டும் ஒரு நோ-பாலில் விக்கெட் கிடைத்து வீணானது. ஆனால் இதோடு முடியவில்லை. இன்னும் ஒரு முறை இதே சம்பவம் தொடர்ந்தது.

கடைசியாக நாதன் லியோன்

கடைசியாக நாதன் லியோன்

கடைசி நேரத்தில் நாதன் லியோன் ஆஸ்திரேலிய அணியை தோல்வியில் இருந்து மீட்க போராடினார். அப்போது இஷாந்த் பந்து அவரது பேடில் பட்டது. அம்பயர் அவுட் என கை உயர்த்தப் போய் பின்னர் நோ-பால் என தெரிந்து நோ-பால் மட்டும் கொடுத்தார். அந்த பந்தும் விக்கெட் விழ வேண்டிய ஒன்றே என ரீ-ப்ளேவில் தெரிந்தது.

மற்ற பந்துவீச்சாளர்கள் அசத்தல்

மற்ற பந்துவீச்சாளர்கள் அசத்தல்

மூத்த வீரரான இஷாந்த் சர்மா சொதப்பிய நிலையில், ஷமி, பும்ரா, அஸ்வின் ஆகியோர் இரண்டாம் இன்னிங்க்ஸில் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இஷாந்த் இந்த போட்டியில் மொத்தமாகவே 3 விக்கெட்கள் தான் எடுத்தார்.

Story first published: Tuesday, December 11, 2018, 12:49 [IST]
Other articles published on Dec 11, 2018
English summary
India vs Australia : Here is the reason, why Ishant sharma is angry even after India won the first test match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+