Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. ஒருநாள் தொடரில் பும்ரா இல்லை.. தேர்வுக் குழு அதிரடி.. உள்ளே வந்த 2 இளம் வீரர்கள் யார்?

மும்பை : இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் ஆட உள்ளது. நியூசிலாந்தில் டி20 தொடரிலும் பங்கேற்க உள்ளது.

இந்த தொடர்களுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருந்த பும்ரா, தற்போது ஓய்வு அளிக்கப்பட்டு அந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தேர்வுக் குழு கூறியுள்ளது.

பும்ராவுக்கு ஓய்வு ஏன்?

பும்ராவுக்கு ஓய்வு ஏன்?

இந்திய அணியில் சமீப காலங்களில் அதிக அளவில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் நான்கு போட்டிகளிலும் பங்கேற்ற பும்ராவுக்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பைக்கு முன்..

உலகக்கோப்பைக்கு முன்..

இந்தியா உலகக்கோப்பைக்கு முன் ஆடவுள்ள கடைசி ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்கள் தான். இந்த நிலையில் அந்த தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வீரர்கள் யார் யார்?

புதிய வீரர்கள் யார் யார்?

அதே சமயம், பும்ராவுக்கு மாற்றாக முஹம்மது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் மிகச் சில சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். நியூசிலாந்து டி20 தொடரில் சித்தார்த் கௌல் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளார்.

ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள்

ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள்

இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழு உலகக்கோப்பை அணியில் இந்தியா ஐந்து வேகப் பந்துவீச்சாளர்கள் வரை சேர்க்க நினைக்கிறது. அதற்கான தயாரிப்பில் முஹம்மது சிராஜ் இருக்கிறார். அவருக்கு ஆஸ்திரேலிய, நியூசிலாந்து தொடர் நல்ல அனுபவமாக இருக்கும்.

ஒருநாள் தொடர் எப்போது?

ஒருநாள் தொடர் எப்போது?

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் வரும் ஜனவரி 12 அன்று துவங்குகிறது. நியூசிலாந்து ஒருநாள் தொடர் ஜனவரி 23 அன்று துவங்குகிறது. அதன் பின்னர் டி20 தொடர் நடைபெற உள்ளது.

Story first published: Tuesday, January 8, 2019, 13:20 [IST]
Other articles published on Jan 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+