Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“யாருமே இங்கு சரி கிடையாது”.. செய்தியாளர் சந்திப்பில் கடுப்பான கே.எல்.ராகுல்.. என்ன நடந்தது??

மொஹாலி: செய்தியாளர் சந்திப்பின் போது இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் சற்று அதிருப்தி அடைந்தார்.

Recommended Video

டி20 உலக கோப்பைக்கு இந்திய அணியின் திட்டம் இதுதான் - கே.எல்.ராகுல் விளக்கம்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பு

டி20 உலகக்கோப்பைக்கு தயாராவதற்கான முக்கிய தொடர் இதுவாகும். எனவே இதுகுறித்து பேச நேற்று கே.எல்.ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஸ்டரைக் ரேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் மிக குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வருகிறார். நடந்து முடிந்த ஆசிய கோப்பையில் 122 தான் அவரின் ஸ்ட்ரைக் ரேட் இருந்தது. இது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது.

கே.எல்.ராகுலின் பதில்

கே.எல்.ராகுலின் பதில்

இந்நிலையில் இதற்கு காரசாரமான பதிலை அவர் கொடுத்தார். அதில், இங்கு எந்த வீரருமே மிகச்சரியானவர்கள் அல்ல, ஒவ்வொரு வீரருக்கும் ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் தான். அதற்காக பயிற்சி மேற்கொள்வார்கள். ஆனால் எப்போதுமே அதே ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ஆட வேண்டும் என்று யாருமே எதிர்பார்க்கக்கூடாது. இதுவரை எவருமே கரியர் முழுவதும் அதே ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்ததும் கிடையாது. சில சமயங்களில் குறையதான் செய்யும்.

முக்கியம் அல்ல

முக்கியம் அல்ல

ஒரு சில சமயங்களில் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது முக்கியம் என்றால் நிச்சயம் அதனைதான் செய்வோம். இதுவே ஒரு வீரர் 100 அல்லது 120 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினால் கூட வெற்றி கிடைக்கும் என்றால் அதனை தான் செய்வோம். எனவே வீரரின் ஒட்டுமொத்த பேட்டிங் வேகத்தை பாருங்கள். ஒரு குறிப்பிட்ட போட்டியை வைத்து பார்க்கக்கூடாது.

கடந்த 10 மாதங்கள்

கடந்த 10 மாதங்கள்

கடந்த 10 - 12 மாதங்களாக அணியில் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு குறிக்கோளை கொடுத்துள்ளனர். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அனைத்து வீரர்களும் அறிவார்கள். அந்தவகையில் ஒரு ஓப்பனிங் வீரராக எனக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளை செய்ய சில மாற்றங்களை செய்து வருகின்றேன் என கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.

எப்போது சரியாகும்

எப்போது சரியாகும்

கடந்த 2016ம் ஆண்டு இந்திய டி20 அணியில் அறிமுகமான கே.எல்.ராகுல் இதுவரை 61 போட்டிகளில் விளையாடி 1,963 ரன்களை சேர்த்துள்ளார். அவரின் ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 140.92 ஆகும். காயத்தில் இருந்து மீண்டும் சமீபத்தில் அணிக்கு திரும்பிய அவர் பழைய ஃபார்முக்கு திரும்ப இன்னும் சில போட்டிகள் தேவைப்படும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Story first published: Tuesday, September 20, 2022, 17:25 [IST]
Other articles published on Sep 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+