Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. முதல் டி20யில் இந்தியா தோற்றாலும் செம கம்பேக் கொடுத்த இந்திய வீரர்!

விசாகப்பட்டினம் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும், இந்திய வீரர் ராகுல் அரைசதம் அடித்து தன் பார்மை மீட்டுள்ளார்.

ராகுல் கடந்த வருடத்தில் சரியாக ரன் குவிக்காமல் பார்ம் இழந்து தவித்து வந்தார். இந்நிலையில், அவரை உலகக்கோப்பை அணியில் அவரது இடம் கேள்விக் குறியாகி இருந்தது.

மாற்று துவக்க வீரர்

மாற்று துவக்க வீரர்

இந்திய அணியில் ரோஹித், தவான் துவக்க வீரர்களாக உலகக்கோப்பைக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாற்று துவக்க வீரர் ஒருவர் அணிக்கு தேவைப்பட்டார். ராகுல் ஏற்கனவே சொதப்பி வந்த நிலையில், அவருக்கு கடைசி வாய்ப்பாக ஆஸ்திரேலிய தொடர் அமைந்துள்ளது.

தவானுக்கு ஓய்வு

தவானுக்கு ஓய்வு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20யில் அடித்த அரைசதம் மூலம் ராகுல் தேர்வாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இந்த போட்டியில் ராகுலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டி, துவக்க வீரர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ராகுல் அரைசதம்

ராகுல் அரைசதம்

இந்த போட்டியில் இந்திய அணியில் ராகுல் மட்டுமே சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். கோலி 24, தோனி 29 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் அணியைக் கை விட்டனர்.

ராகுல் பேட்டிங் எப்படி?

ராகுல் பேட்டிங் எப்படி?

ராகுல் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவர் தன் பேட்டிங்கில் 6 ஃபோர் மற்றும் 1 சிக்ஸ் அடித்தார். இது டி20 போட்டிகளில் ராகுல் அடிக்கும் நான்காவது அரைசதம் ஆகும்.

இடை நீக்கம்

இடை நீக்கம்

முன்னதாக ராகுல் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் பண்டியாவுடன் சேர்ந்து சிக்கினார். அதனால், இடை நீக்கத்துக்கு ஆளானார். பின்னர் தடையில் இருந்து தப்பித்த ராகுல், இந்தியா ஏ அணிக்காக ஆடினார்.

இடம் கிடைக்குமா?

இடம் கிடைக்குமா?

அதன் மூலம், மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தார். தற்போது நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட்டிங் செய்துள்ளார். அடுத்து வரும் போட்டிகளில் அவரது செயல்பாடுகளை வைத்து தான் அவரது உலகக்கோப்பை வாய்ப்பு உறுதியாகும்.

Story first published: Sunday, February 24, 2019, 22:49 [IST]
Other articles published on Feb 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+