Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த “உனோ இரவுகள்” போச்சே.. காதலியை நினைத்து புலம்பல்.. ஆஸி.வில் தவிக்கும் இந்திய அணி துணை கேப்டன்!

சிட்னி : இந்திய அணியின் துணை கேப்டன் கேஎல் ராகுல் தன் காதலியை விட்டு விட்டு ஆஸ்திரேலியாவில் தவித்து வருகிறார்.

இன்னும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டிகள் துவங்கவில்லை. இப்போது தான் இந்திய அணி வலைப் பயிற்சியை துவங்கி உள்ளது.

இப்போதே புலம்பத் துவங்கி இருக்கிறார் அணியின் புதிய துணை கேப்டன் கேஎல் ராகுல்.

கேஎல் ராகுல்

கேஎல் ராகுல்

இந்திய அணியில் நீண்ட காலமாக இடம் பெற்று இருந்தாலும் சமீபத்தில் தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிலையான இடத்தை பெற்றுள்ளார் கேஎல் ராகுல். மேலும், பேட்ஸ்மேன் ஆன அவர் கூடுதலாக விக்கெட் கீப்பிங் பணியையும் அணிக்காக செய்து வருகிறார்.

துணை கேப்டன் பதவி

துணை கேப்டன் பதவி

அவரது சிறப்பான பார்ம் காரணமாக அணியில் இடத்தை தக்க வைத்த அவருக்கு ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டன் பதவி தேடி வந்துள்ளது. ரோஹித் சர்மா காயம் காரணமாக அந்த அணிகளில் இடம் பெறாத நிலையில் அவருக்கு அந்த பதவி தற்காலிகமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தொடர்

ஆஸ்திரேலிய தொடர்

நவம்பர் 27 முதல் ஒருநாள் தொடருடன் துவங்கும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் டெஸ்ட் தொடருடன் ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது. மிகவும் கடினமான தொடராக இது இருக்கும் என்பதால் இந்திய அணி குவாரன்டைன் சமயத்திலும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

காதலி இல்லாமல் தவிப்பு

காதலி இல்லாமல் தவிப்பு

கேஎல் ராகுல் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆதியாவை காதலித்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் பயிற்சி நேரம் போக மற்ற நேரத்தில் தன் காதலி இல்லாமல் தவித்து வருகிறார். அதை சமூக வலைதளத்தில் பதிவாக பகிர்ந்து புலம்பியும் இருக்கிறார்.

ஜோடி ஜோடியாக வந்த வீரர்கள்

ஜோடி ஜோடியாக வந்த வீரர்கள்

பல இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் முதலே பாதுகாப்பு வளையத்தில் ஆடி வருவதால் ஆஸ்திரேலிய தொடருக்கு தங்கள் மனைவி, காதலியை அழைத்து வந்துள்ளனர். ஆனால், கேஎல் ராகுல் தனியாகவே இருக்கிறார். அதனாலேயே புலம்பி இருக்கிறார்.

அந்த பதிவு

அந்த பதிவு

இன்ஸ்டாகிராமில் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அவர். அதில் "உனோ இரவுகளை மிஸ் செய்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் வேறு சிலருடன் அவர் சீட்டுக் கட்டு ஆடும் காட்சி இடம் பெற்றுள்ளது.

அது என்னங்க உனோ?

அது என்னங்க உனோ?

அவர் குறிப்பிட்டுள்ள "உனோ" (Uno) ஒரு சீட்டுக் கட்டு விளையாட்டாகும். அது வழக்கமாக ஆடும் சீட்டுக்கட்டு போல இல்லாமல் வேறு முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். முன்பு தன் காதலி மற்றும் நண்பர்களுடன் அவர் உனோ ஆடி உள்ளார். அதைத் தான் குறிப்பிட்டு இருக்கிறார்.

இரண்டு மாதம் ஆகும்

இரண்டு மாதம் ஆகும்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் முடிவடைய இரண்டு மாதங்கள் ஆகும். நவம்பர் 27 அன்று ஒருநாள் தொடரும், டிசம்பர் முதல் வாரத்தில் டி20 தொடரும் நடைபெறும். அதன் பின் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் டெஸ்ட் தொடர் முடிந்த பின்னரே வீரர்கள் இந்தியா திரும்ப முடியும்.

Story first published: Monday, November 16, 2020, 21:07 [IST]
Other articles published on Nov 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+