வரலாறு படைத்த ஜெய்ஸ்வால் - கே எல் ராகுல்.. எந்த இந்திய ஓபனிங்கும் செய்யாத இமாலய மைல்கல் சாதனை
பெர்த்: ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் துவக்க வீரர்களாக ஆஸ்திரேலிய மண்ணில் இமாலய சாதனை படைத்து உள்ளனர். இதுவரை எந்த இந்திய துவக்க ஜோடியும் தொட முடியாத மைல்கல் சாதனையை செய்து உள்ளது இந்த ஜோடி.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 104 ரன்களும் மட்டுமே எடுத்து இருந்தன. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி அதிரடியாக ரன் குவித்தது.

துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் முதல் விக்கெட்டுக்கு 201 ரன்கள் சேர்த்தனர். கே எல் ராகுல் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஜெய்ஸ்வால் சதம் கடந்து 102 ரன்கள் சேர்த்து இருந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 201 ரன்கள் சேர்த்து இருந்தது.
ஆஸ்திரேலியா மண்ணில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்து இந்திய துவக்க வீரர்கள் என்ற சாதனையை இந்த ஜோடி படைத்து இருக்கிறது. இதற்கு முன் சுனில் கவாஸ்கர் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இணைந்து 1986 இல் சிட்னி டெஸ்ட் போட்டியில் 191 ரன்கள் எடுத்து இருந்தனர். அதுவே ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய துவக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.
அந்த சாதனையை ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஜோடி முறியடித்து இருக்கிறது. இது மட்டும் இன்றி தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய துவக்க ஜோடிகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறது ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் ஜோடி.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய துவக்க ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்கள் -
213 ரன்கள் - சுனில் கவாஸ்கர், சேத்தன் சவுகான் - தி ஓவல், இங்கிலாந்து - 1979
203 ரன்கள் - விஜய் மெர்ச்சன்ட், முஷ்டாக் அலி - மான்செஸ்டர், இங்கிலாந்து - 1936
201 ரன்கள் - யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே எல் ராகுல் vs AUS, பெர்த் (ஆப்டஸ்), 2024
191 ரன்கள் - சுனில் கவாஸ்கர், கிரிஸ் ஸ்ரீகாந்த், சிட்னி - ஆஸ்திரேலியா - 1986
165 ரன்கள் - சுனில் கவாஸ்கர், சேத்தன் சவுகான் - மெல்போர்ன், ஆஸ்திரேலியா - 1981
ஆஸ்திரேலிய மண்ணில் 200 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்த துவக்க ஜோடிகளின் பட்டியலில் ஜெய்ஸ்வால் - கே எல் ராகுல் ஜோடி ஆறாவது இடத்தை பிடித்து இருக்கிறது. அந்தப் பட்டியல் இங்கே -
323 - ஜாக் ஹோப்ஸ், வில்ஃப்ரெட் ரோட்ஸ் (இங்கிலாந்து), மெல்போர்ன், 1912
283 - ஜாக் ஹோப்ஸ், ஹெர்பர்ட் சட்க்ளிஃப் (இங்கிலாந்து), மெல்போர்ன், 1925
234 - பாப் பார்பர், ஜெஃரி பாய்காட் (இங்கிலாந்து), சிட்னி, 1966
223 - பில் அத்தே, கிறிஸ் பிராட் (இங்கிலாந்து), பெர்த், 1986
203 - மைக்கேல் அதர்டன், கிரஹாம் கூச் (இங்கிலாந்து), அடிலெய்டு, 1991
201 - யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே எல் ராகுல் (இந்தியா), பெர்த், 2024


Click it and Unblock the Notifications