Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண்டியா பேசுனதுக்கு டீம் பொறுப்பில்லை.. அவருக்கு பதில் ஜடேஜாவை வைத்து ஆடுவோம்.. எஸ்கேப் ஆன கோலி

சிட்னி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல் காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பண்டியா எல்லை மீறி பெண்கள் மற்றும் தன் பழக்க வழக்கம் பற்றி பேசினார்.

அந்த விவகாரத்தில் பண்டியா, ராகுலுக்கு சில போட்டிகள் ஆட தடை விதிக்கப்படும் என கூறப்படும் நிலையில், கோலி அவர்களுக்கு அணி சார்பாகவும், கேப்டன் என்ற முறையிலும் எந்த ஆதரவும் அளிக்கப் போவது இல்லை என்பதை நாசூக்காக தெரிவித்துள்ளார்.

பண்டியா சர்ச்சை பேச்சு

பண்டியா சர்ச்சை பேச்சு

பண்டியா மற்றும் ராகுல் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல தகவல்களை காபி வித் கரன் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டனர். ராகுல் பேசியது பெரிய அளவில் சர்ச்சை ஆகாவிட்டாலும், பண்டியா பேசிய சில விஷயங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பை சந்தித்தது.

கோலி கருத்து

கோலி கருத்து

பிசிசிஐ இருவருக்கும் நோட்டீஸ் அளித்து விசாரணை செய்தது. இறுதியில், இருவருக்கும் சில போட்டிகள் தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கேப்டன் கோலி இந்த விவகாரம் குறித்த தன் கருத்தை கூறினார்.

நாங்க வேற.. அவர் வேற

நாங்க வேற.. அவர் வேற

கோலி கூறுகையில், "நாங்கள் இந்திய அணி என்ற முறையிலும், பொறுப்புள்ள கிரிக்கெட் வீரர்கள் என்ற முறையிலும் அந்த கருத்துக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அது தனிப்பட்ட கருத்து. இதில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்" என தெரிவித்தார்.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

"ஆனால், இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் அணியின் பார்வையை, வீரர்களின் நம்பிக்கையை மாற்றாது. இந்த விஷயத்தில் முடிவு எடுக்கப்பட்ட உடன் அணியில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

ஜடேஜா உள்ளே

ஜடேஜா உள்ளே

மேலும், ஜடேஜா மற்றும் குல்தீப் இருவரும் சிறந்த பிங்கர் ஸ்பின்னர் - ரிஸ்ட் ஸ்பின்னர் கூட்டணியாக இருக்கிறார்கள். ஜடேஜா நல்ல ஆல்-ரவுண்டராகவும் இருப்பதால், பண்டியா இல்லாவிட்டால் அந்த இடத்தை ஜடேஜா நிரப்புவார் என கூறினார்.

கோலி ஏன் இப்படி கூறினார்?

கோலி ஏன் இப்படி கூறினார்?

கோலியை பொறுத்தவரை இந்தியா தற்போது உலகக்கோப்பையை நோக்கி தீவிரமாக முன்னேறி வருகிறது. அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து, பின்னர் மீண்டும் ஆஸ்திரேலியா என வரிசையாக ஒருநாள் தொடர்களில் பங்கேற்று சிறந்த வீரர்களை, சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கூட்டணியை அடையாளம் காணும் முயற்சியில் இருக்கிறார்.

ஆதரவு இல்லை

ஆதரவு இல்லை

இந்த நேரத்தில் பண்டியா மற்றும் ராகுலுக்கு ஆதரவு அளித்தால் அது அணிக்குள் குழப்பத்தை உண்டாக்கலாம். மற்ற வீரர்களையும் இந்த விவகாரத்தில் இழுத்து விட்டது போல ஆகிவிடும். ரசிகர்களும் இந்திய அணிக்கு எதிராக திரும்பி விடுவார்கள்.

அணிக்கு இழப்பு இல்லை

அணிக்கு இழப்பு இல்லை

அதையெல்லாம் மனதில் வைத்து மற்ற வீரர்களை இந்த விவகாரத்தில் இருந்து தள்ளி வைத்துப் பேசியுள்ளார் கோலி. அவர்கள் இல்லை என்றாலும் அணியில் எந்த இழப்பும் இல்லை எனக் கூறி அணி நிலையாக இருப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

Story first published: Friday, January 11, 2019, 13:54 [IST]
Other articles published on Jan 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+