Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.வை வைச்சு செய்யும் விராட் கோலி.. ஆதாரம் வேணுமா? இதோ இருக்கு.. பார்த்துக்குங்க!

விசாகப்பட்டினம் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டி20 போட்டியில் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயர் பெற்ற கோலி, டி20 போட்டிகளில் ஒரே நாட்டுக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்பதோடு, 500 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

கோலி 24 ரன்கள்

கோலி 24 ரன்கள்

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும், பலவீனங்கள் இருந்தன. அதனால், இந்தியா கடைசி பந்து வரை போராடி தோற்றது. கோலி இந்த போட்டியில் 24 ரன்கள் மட்டுமே அடித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 500

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 500

கோலி 24 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் டி20 போட்டிகளில் 512 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் ஒரே அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் 500 ரன்களுக்கும் மேல் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் கோலி. டி20யில் ஆஸ்திரேலிய அணி என்றாலே கோலிக்கு "அல்வா சாப்பிடுவது போல" என்பது இந்த மைல்கல் மூலம் தெரிய வந்துள்ளது.

முதல் இடம்

முதல் இடம்

மேலும், ஒரே அணிக்கு எதிராக டி20யில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 512 ரன்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

அடுத்த இடத்தில் யார்?

அடுத்த இடத்தில் யார்?

இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியின் மார்டின் குப்டில் இருக்கிறார். இவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 463 ரன்கள் குவித்து இருக்கிறார். விரைவில் இவர் கோலியை முந்துகிறாரா என பார்க்கலாம்.

இது நடக்கலையே!

இது நடக்கலையே!

இந்த சாதனையை செய்து இருந்தாலும், கோலி முதல் டி20யில் ஒரு விஷயத்தில் கோட்டை விட்டார். விசாகப்பட்டினம் மைதானத்தில் கோலி எப்போதுமே 50+ ரன்கள் மட்டுமே அடித்து இருந்தார். ஆனால், இந்த போட்டியில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

Story first published: Monday, February 25, 2019, 14:46 [IST]
Other articles published on Feb 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+