Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்தை எடுத்த கோலி.. பதறிய அம்பயர்.. பால் டேம்பரிங்! கதறும் ஆஸி. ரசிகர்கள்.. என்ன தான் செய்தார் கோலி?

சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் முதல் நாளன்று இந்தியா டாஸ் வென்று முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை ஆடியது.

இந்திய அணியில் மாயன்க் 77 ரன்கள் அடித்தார். புஜாரா சதம் அடித்து களத்தில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். கோலி தன் பேட்டிங்கின் போது செய்த ஒரு காரியம் அம்பயரை பதற வைத்தது. ஆஸ்திரேலிய ரசிகர்களையும் பந்தை சேதப்படுத்தி விட்டார் என கதற வைத்துள்ளது. அப்படி என்ன செய்தார் கோலி?

பந்தை வைத்து விளையாடிய கோலி

பந்தை வைத்து விளையாடிய கோலி

கோலி முதல் நாள் தேநீர் இடைவேளையின் போது பந்தை எடுத்து பேட்டில் வைத்து தட்டி விளையாட ஆரம்பித்தார். இதை பார்த்த அம்பயர் ரிச்சர்ட் கெட்டில்பரோ பதற்றமடைந்து பந்தை கோலியிடம் இருந்து வாங்க முயன்றார்.

அம்பயர் கையில் தட்டி விட்டார்

அம்பயர் கையில் தட்டி விட்டார்

கோலி, அம்பயர் பந்தை கேட்கிறார் என தெரிந்தும் 2- 3 முறை பந்தை தட்டி விளையாடிய பின்னரே அம்பயர் கையில் தட்டி விட்டார். இந்த வீடியோ காட்சியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையத்தில் பகிர்ந்துள்ளது.

புகார் கூறிய ரசிகர்கள்

புகார் கூறிய ரசிகர்கள்

கோலியின் செயலை இந்திய ரசிகர்கள் வேடிக்கையான ஒன்றாக எடுத்துக் கொண்டாலும் சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலி பந்தை பேட்டால் தட்டி சேதப்படுத்தினார் என புகார் கூறியுள்ளார்கள்.

கோலியை தடை செய்ய வேண்டும்

கோலியை தடை செய்ய வேண்டும்

சில ரசிகர்கள் வேடிக்கையாக ஸ்மித், வார்னர் போல கோலியை ஒரு வருடத்துக்கு தடை செய்ய வேண்டும் என்றும், சிலர் கோலி ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று இருந்தால் இந்த செயலுக்கு தடை செய்யப்பட்டு இருப்பார் என கூறினார்கள்.

ஓராண்டு தடை

ஓராண்டு தடை

ஸ்மித், வார்னர் ஆகியோர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களுக்கு ஐசிசி சிறிய அளவில் தண்டனை கொடுத்தது. ஆனால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவர்களை ஓராண்டு தடை செய்து அதிர்ச்சி அளித்தது.

ஐசிசி நடவடிக்கை வேண்டும்

ஐசிசி நடவடிக்கை வேண்டும்

அது பெரிய தண்டனை என பலரும் கூறினர். அதை கோலியின் இந்த செயலுடன் ஒப்பிட்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகத்தையும் கேலி செய்துள்ளனர். அதே சமயம், சில ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலி பந்தை தட்டியதை தீவிரமாக எடுத்துக் கொண்டு ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

தவறு தான்

ஸ்மித், வார்னர் பந்து சேத விவகாரத்துக்கு பின் பந்தை கையாளுவதில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. நிச்சயம், பேட்டிங் செய்ய வேண்டிய கோலி இடைவேளையில் பந்தை எடுத்து தட்டிக் கொண்டு இருந்தது தவறு தான்.

Story first published: Thursday, January 3, 2019, 16:53 [IST]
Other articles published on Jan 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+