Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 தொடரில் இந்தியாவுக்கு தோல்வி.. ஆனால் ராகுல், கோலி, தோனிக்கு முன்னேற்றம்!!

துபாய் : இந்த வார ஐசிசி டி20 போட்டிகளுக்கான தரவரிசை வெளியிடப்பட்டது. அதில் இந்திய வீரர்கள் பலர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா தோல்வி அடைந்தது. எனினும், இந்திய வீரர்கள் பலர் ரேங்கிங்கில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ராகுல் அதிரடி

ராகுல் அதிரடி

இந்த தொடரில் அதிரடியாக இரண்டு போட்டிகளிலும் ரன் குவித்த ராகுல் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆறாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார். நீண்ட காலமாக பார்ம் இன்றி தவித்து வந்த ராகுல் ஆஸ்திரேலிய டி20 தொடர் மூலம் தன் இயல்பான பேட்டிங்கை மீட்டுள்ளார்.

தோனி, விராட் கோலி

தோனி, விராட் கோலி

தோனி 56வது இடத்திற்கும், கோலி 17வது இடத்திற்கும் முன்னேறி உள்ளனர். இவர்கள் இருவரும் இரண்டாவது போட்டியில் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். முதல் போட்டியில் 20+ ரன்களை எடுத்தனர்.

பும்ரா, க்ருனால் பண்டியா

பும்ரா, க்ருனால் பண்டியா

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா 12 இடங்கள் முன்னேறி 15வது இடத்தையும், க்ருனால் பண்டியா 18 இடங்கள் முன்னேறி 43வது இடத்தையும் பிடித்தனர். ஆஸி. தொடரில் பங்கேற்காத குல்தீப் யாதவ் 2 இடங்கள் கீழிறங்கி நான்காம் இடத்திற்கு வந்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர்கள் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய வீரர்கள் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய அணியில் இரண்டு போட்டியிலும் கலக்கிய மாக்ஸ்வெல் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மற்றொரு பேட்ஸ்மேன் டி'ஆர்சி ஷார்ட் எட்டாவது இடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி ஐந்தாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.

ஜஜாய் சூப்பர்

ஜஜாய் சூப்பர்

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து தொடரில் சிறப்பாக ஆடி ஒரு போட்டியில் 162 ரன்கள் குவித்த ஹசரதுல்லாஹ் ஜஜாய் 31 இடங்கள் முன்னேறி பேட்ஸ்மேன் தரவரிசையில் ஏழாம் இடம் பிடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Story first published: Thursday, February 28, 2019, 17:29 [IST]
Other articles published on Feb 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+