For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடே!! உச்சு கொட்ட வைக்கும் பிரையன் லாரா சாதனையை முந்திய கோலி!!

பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி சில மோசமான சாதனைகளை செய்துள்ளனர். அதே சமயம், ஆஸ்திரேலிய அணி தோல்வி பாதையில் இருந்து மீண்டுள்ளது. இந்திய அணி செய்த சோக சாதனைகளை பற்றிப் பார்ப்போம்.

கோலி சதம் அடித்தும் தோல்வி

கோலி சதம் அடித்தும் தோல்வி

கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில் 123 ரன்கள் அடித்தார். இது அவரது 25வது சதமாகும். எனினும், இந்த போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் வெற்றிக்கு தேவையான 287 ரன்களை துரத்திய இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

சோக சாதனை செய்த கேப்டன்

சோக சாதனை செய்த கேப்டன்

ஒரு அணியின் கேப்டன் சதம் அடித்தும் அந்த அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். இது வரை கோலி சதம் அடித்த ஏழு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவியுள்ளது. அதில் ஆறு முறை கோலி கேப்டனாக இருந்த போட்டிகள்.

பட்டியலில் முதல் இடம்

பட்டியலில் முதல் இடம்

ஆறு போட்டிகளுடன் இந்த பட்டியலில் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். இரண்டாம் இடத்தில் பிரையன் லாரா ஐந்து போட்டிகளுடனும், மூன்றாம் இடத்தில் ஸ்டீவ் வாஹ் நான்கு போட்டிகளுடனும் இருக்கிறார்கள்.

15 வெளிநாட்டு தோல்விகள்

15 வெளிநாட்டு தோல்விகள்

கடந்த 15 ஆண்டுகளில் இந்திய அணி இதுவரை 15 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக 2003இல் அடிலெய்டு-இல் நடைபெற்ற டெஸ்டில் 200 ரன்களுக்கும் அதிகமாக சேஸ் செய்து வெற்றி பெற்று இருந்தது.

ஒரே ஆண்டில் ஆறாவது தோல்வி

ஒரே ஆண்டில் ஆறாவது தோல்வி

மேலும், இந்த ஒரே ஆண்டில் இந்தியா ஆறாவது முறையாக வெளிநாட்டு டெஸ்டில் தோல்வி அடைந்துள்ளது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணி பெர்த் போட்டிக்கு முன்னதாக ஆறு போட்டிகளில் ஐந்து தோல்விகள் மற்றும் ஒரு டிரா மட்டுமே செய்து பரிதாபமாக இருந்தது. ஆனால், தற்போது இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று தோல்விப் பாதையில் இருந்து மீண்டுள்ளது.

Story first published: Wednesday, December 19, 2018, 17:02 [IST]
Other articles published on Dec 19, 2018
English summary
India vs Australia : Kohli surpasses Brian Lara’s worst record as a captain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X