Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டெஸ்ட் அணியின் புதிய அறிமுகம் மாயங்க் அகர்வால்.. யார் இவர்? சேவாக் போல ஆடுவாராமே!!

மெல்போர்ன் : இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மெல்போர்ன் மைதானத்தில் ஆட உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா சார்பில் மாயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாக உள்ளார். யார் இந்த மாயங்க் அகர்வால்?

கர்நாடகா பேட்ஸ்மேன் மாயங்க்

கர்நாடகா பேட்ஸ்மேன் மாயங்க்

துவக்க வீரர் ப்ரித்வி ஷா காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக இடம் பிடித்த மாயங்க் அகர்வால் துவக்க வீரராக களம் இறங்க உள்ளார். இவர் பெங்களூரை சேர்ந்தவர். வலது கை பேட்ஸ்மேன் ஆன மாயங்க், கர்நாடக மாநில கிரிக்கெட் அணியில் ஆடி வருகிறார்.

பல்வேறு போட்டிகள்

பல்வேறு போட்டிகள்

கர்நாடக அணிக்காக அண்டர் 19 முதல் ரஞ்சி, லிஸ்ட் ஏ போட்டிகள் வரை தொடர்ந்து ஆடி வருகிறார். இந்தியா அண்டர் 19 அணிக்கும் ஆடியுள்ளார். சிறப்பான ரஞ்சி தொடர் செயல்பாடுகள் காரணமாக இந்தியா ஏ அணியிலும் பல முறை ஆடியுள்ளார்.

பேட்டிங்கில் அதிக சராசரி

பேட்டிங்கில் அதிக சராசரி

46 முதல் தர போட்டிகளில் ஆடி 8 சதம், 20 அரைசதம் அடித்துள்ளார். 75 லிஸ்ட் ஏ போட்டிகளில் ஆடி 12 சதம், 14 அரைசதம் அடித்துள்ளார். இவரது சராசரி முதல் தர போட்டிகள் மற்றும் லிஸ்ட் ஏ இரண்டிலும் 50-ஐ ஒட்டியே உள்ளது.

ஐபிஎல் அனுபவம் உண்டு

ஐபிஎல் அனுபவம் உண்டு

ஐபிஎல் தொடரில் இது வரை டெல்லி டேர்டெவில்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர், புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு ஆடியுள்ள மாயங்க், தற்போது 2019 ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றுள்ளார்.

பிடித்த கிரிக்கெட் வீரர் சேவாக்

பிடித்த கிரிக்கெட் வீரர் சேவாக்

இவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் என்பதோடு, அவரை போலவே தன் பேட்டிங்கை அமைத்துக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள். கடந்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அணியில் இடம் பெற்ற மாயங்க் அகர்வால், களம் இறங்கும் வாய்ப்பை பெறவில்லை.

சவாலான அறிமுகம்

சவாலான அறிமுகம்

தற்போது, இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆட உள்ளார். இந்தியா இந்த தொடரை வெல்ல அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி அல்லது டிரா செய்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதனால், மாயங்க் அகர்வாலுக்கு இது சவால் நிறைந்த அறிமுகமாகவே இருக்கும்.

Story first published: Tuesday, December 25, 2018, 13:48 [IST]
Other articles published on Dec 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+