Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த மாயங்க் அகர்வால்.. ப்ரித்வி ஷாவுக்கு ஜோடி கிடைச்சாச்சு

மெல்போர்ன் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மாயங்க் அகர்வால் அறிமுகம் ஆகி உள்ளார்.

அறிமுகம் ஆனதோடு தன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணிக்கு சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் தடுமாறி வந்த நிலையில் இவரது அசத்தலான அறிமுகம் அணிக்கு உற்சாகமூட்டி உள்ளது.

டெஸ்ட் அறிமுகம்

டெஸ்ட் அறிமுகம்

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 295வது இந்திய டெஸ்ட் வீரராக அறிமுகம் ஆனார் மாயங்க் அகர்வால். ஹனுமா விஹாரியுடன் துவக்க வீரராக களம் இறங்கினார் மாயங்க் அகர்வால்.

கூட்டணி அமைத்தார்

கூட்டணி அமைத்தார்

ஹனுமா விஹாரியும் முதன் முறையாக துவக்க வீரராக களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கூட்டாக 40 ரன்கள் அடித்து இருந்த போது ஹனுமா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய மாயங்க் அகர்வால், அடுத்து புஜாராவுடன் கூட்டணி அமைத்து ரன் குவித்தார்.

76 ரன்கள் அடித்தார்

76 ரன்கள் அடித்தார்

தன் அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த மாயங்க் அகர்வால், 76 ரன்களுக்கு கம்மின்ஸ் பந்தில் விக்கெட் கீப்பர் டிம் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தன் இன்னிங்க்ஸில் 8 ஃபோர்களும், 1 சிக்ஸரும் அடித்து இருந்தார்.

ப்ரித்வி - மாயங்க் கூட்டணி

ப்ரித்வி - மாயங்க் கூட்டணி

ப்ரித்வி ஷா இந்திய அணியின் அட்டகாசமான துவக்க வீரராக அறிமுகமான நிலையில், அடுத்து மாயங்க் அகர்வால் அரைசதம் அடித்து அறிமுகம் ஆகி உள்ளார். ஹனுமா விஹாரி தற்காலிகமாகவே துவக்க வீரராக களம் இறங்குகிறார். ப்ரித்வி ஷா காயத்தில் இருந்து மீண்ட பின் ப்ரித்வி ஷா - மாயங்க் அகர்வால் இணைந்து துவக்கம் அளிப்பார்கள் என கூறப்படுகிறது.

Story first published: Wednesday, December 26, 2018, 11:25 [IST]
Other articles published on Dec 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+